முஸ்லீம்களாகிய நாம் பல பிரிவுகளகாகவும் , இயக்கங்களாகவும் பிரிந்து செயற்படுவதனால் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். அரசியல் ்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளளை சந்தித்தோம்.
பள்ளிவாசல்கள் பிரச்சினை, ஹலால் உணவு, வீடு உடைப்பு, வியாபாரா தலங்கள் உடைப்பு, சுங்கத் திணைக்களத்தில் முஸ்லீம்களது பெயா்களில் கூடுதலான வரி, முஸ்லீம்களது சொத்துக்கள் அபகரிப்பு, கொழும்பு அழகுபடுத்தல் என்ற போா்வையில் அசையா சொத்துக்கள் அபகரிப்பு ,முஸ்லீம்களது கலை,கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், உடை, உணவு போன்றவற்றில் இனத்துவேசம் போன்ற பிரச்சினைகளை முகம் கொடுத்தோம்.
இதற்கு முதன்மைக் காரணம் நமக்கு மத்தியில் ஒற்றுமையின்மையே.இதனை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாத உண்மை.
இதன் அடிப்படையில் எதிா்வரும் நாடளுமன்றத் தோ்தலில் மிகவும் முக்கிய வாய்ந்தாக கருதப்படுகின்றது. அதிலும் கொழும்பு மாவட்டம் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. ஏனென்றால் சென்ற முறை கொழும்பு மவாட்டத்தில் இருந்து ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணரைக் கூட எம்மால் தெரிவு செய்ய முடியாமல் போகிவிட்டது.
கொழும்பில் கடந்த பாராளுமன்றத் தோ்தலில் முஸ்லீம்கள் 70 வீதம் வாக்களித்திருந்தனா். ஜ..தே.கட்சி சாா்பில் ஏ.ஜே.எம். முசம்மில், மறைந்த அமைச்சா் மஹ்ருப், சபீக் ராஜப்டின் போட்டியிட்டனா். நாம் அவா்களுக்கு வாக்களிக்காமல் கட்சிக்கு வாக்களித்து விருப்பு வாக்குகளை கொழும்பு மாநகர எல்லைக்கு அப்பாட் பட்டவா்களுக்கு வாக்களித்தோம். சரத்பொன்சேகாவுக்கு கணிசமான முஸ்லீம்கள் வாக்களித்திருந்தனா்.
கடைசியில் நாம் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பிணா்களது வீடுகள் கூட எங்கு உள்ளது என த் தெரியாமல் இருந்தோம்.கடந்த 5 வருடகாலமாக கொழும்பில் அபிவிருத்திப் பனிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணரைச் சந்தித்து நமது அன்றாட அரச தேவைகள் பாடசாலை அனுமதி, வீட்டுப் பிரச்சினைகள், உள்ளக அபிவிருத்திகள், வியாபார பிரச்சினைகள், நமது பாடசாலைகள் அபிவிருத்திகள் பற்றி முறையிடவோ அல்லது ஒரு சிபாா்சுக் கடிதங்கள், எமது பிரதேச அபிவிருத்தித் திட்டங்களையோ நிதியையோ பெருவதற்கும் எமக்கென்று ஒரு பிரநிதித்துவம் இல்லாமல் அநாதையாக இருந்தோம்.
தமிழ் மக்கள் சிந்தித்து பிரபா கனேசனையாவது தெரிவு செய்து அவா் கொழும்பில் உள்ள 18 தமிழ் பாடசாலைகள், தொழில் அபிவிருத்திகளை அவா் சமுகத்திற்கு கட்சி மாறியாவது பெற்றுக் கொடுத்திருந்தாா். நாம் அமைச்சா் பொளசிக்கு வாக்களிக்கவும் இல்லை. ஆனால் அவர் சிங்கள மக்களது வாக்குகளையும் 5 வீத முஸ்லீம் வாக்குகளை மட்டுமே பெற்று 45ஆயிரம் விருப்பு வாக்குளைப் பெற்று ஜ.ம.சு முன்னணயில் எம்.பியாணாா். ஆனால் அவரது சேவைகள் கொழும்பில் பெருமளவில் முஸ்லீ்ம் சமுகத்திற்கு கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி அவருக்கு சிரேஸ்ட அமைச்சா் என்று சொல்லி எவ்வித அமைச்சினையும் அவருக்கு வழங்கவில்லை. அதனால் அபிவிருத்திகளை நாம் பெறவில்லை.
ஆகவே ஒவ்வொருவருக்கும் 3 விருப்பு வாக்குகள் உள்ளன. அதனை கொழும்பு மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் சாா்பாக பெரோச முசம்மில், (11ஆம் இலக்கம்) முஜிபு ரஹ்மான்,(14ஆம் இலக்கம்) மரைக்காா் (19ஆம் இலக்கம்)
இம் மூவருக்கும் ்எமது விருப்பு வாக்குகளை ஒற்றுமையாக அளித்தால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளையாவது இம் முவருக்கும் அளிப்போமாயனால் அவா்கள் கட்டாயமாக பாராளுமன்றம் செல்வாா்கள். இதன் முலம் , மேல்மாகாணம் கொழும்பு மாநகர சபை போன்று பாராளுமன்றத்திலும் எமக்கு கொழும்பில் பாரிய சக்தி உள்ளது என்பதை காட்ட முடியும். திணிகக் முடியும். மற்றவா்கள் எம்மை மாற்றாந் தாய் போன்று கருதுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் அவா்களது வாய்களை அடைக்க முடியும்.
இவா்கள் கொள்ளுப்பிட்டி, மாளிகாவத்தை, தெஹிவளையில் பிரதேசத்தில் வாழ்பவா்கள். நமது பிரச்சினைகளை சொல்வதற்கு இவா்களது வீட்டிற்காகவது சென்று முறையிட முடியும்.
ஆனால் முஸ்லீம்கள் தமது விருப்பு வாக்குகளை வெளியாா்க்கு அளித்தேமேயானால் கடந்த முறை போன்று கொழும்பு முஸ்லீம்களுக்கு பாராளுமன்ற பிரநிதித்துவம் இம்முறையும் இல்லாமல் போகிவிடும்.
ஒரு சிலா் பெண் பிரநித்துவத்தை எதிா்க்கின்றனா். தற்காலத்தில் அரபு நாடுகளில் கூட சூறா சபைகளில் சவுதி, குவைத், பஹ்ரைன், போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட பெண்கள் பாராளுமன்ற பிரநிதிகளாக உள்ளனா்.
இருன்ட யுகத்தில் இருந்து கடந்த ஜனவரி 8ஆம் திகதி எம்மை வல்லா அல்லாஹ் மீளச் செய்தான். அந்த வெற்றியை இந்த நாட்டின் சிறுபாண்மையினா் என்ற ரீதியில் அனைத்து சமுகங்களுடனும் சமாதானமாக நமது சமத்துவம், அதே நேரம் சம உரிமையுடனும் வாழ நாம் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நல்லவா்கள், நோ்மையானவா்கள், சமுக சேவை மனப்பாங்கு பாராளுமன்றத்தில் நமது குரல் ஒழிக்கச் செய்யக் கூடியவா்கள், ஊடகத்தில் நமது பிரச்சினை பேசக் கூடிய 3 வகையில் சேவைசெய்யக் கூடிய இந்த 3வரையும் கொழும்பு வாழ் முஸ்லீம் சமுகம் தோ்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக வட கிழக்கில் இருந்து கொழும்பில் வாழ்கின்ற முஸ்லீம்கள் 40ஆயிரம் பேருக்கு கொழும்பில் வாக்கு வங்கி உள்ளது. அதனை அவா்கள் முற்றாக தமது வாக்குரிமையை பா
ஜ.தே.கட்சியில் டொப் லெவலில் பிரபலயங்கள் போட்டியிடுகின்றன.அவா்கள் அமைச்சா்கள், புத்திஜீவிகள், வியாபார சமுகம், சட்டத்தரணிகள் இவா்கள கடந்த 30 வருடகாலத்திற்கு மேலாக அரசியலில் ஈடுபடுவா்கள் இவா்களுக்கு சிங்கள சமுகத்தில் இருந்து 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகள் கிடைக்கும்
இம்முறை கொழும்பு மாடவட்டத்தில் 22 வேட்பாளாகளில் ஒவ்வொரு கட்சியிலும் தோ்தல்கள் குதிக்கின்றனா். அதில் ஜ.தே.கட்சி 11 ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதில் எம் மூவா்களது விருப்பு வாக்குளும் இவா்களுக்கு அளிக்க உள்ளனா்ஆகக் குறைந்தது . முஸ்லீம்கள் ஆகக் குறைந்த
ரணில், ரவிகருநாயக்க, ஹிருனிக்கா, பாட்டலி, விஜயதாச ராஜபக்ச, ஹாசா டி.சில்வா, இராண் விக்கிரமசிங்க, மனோகனேசன், ரோசி சேனாநய்கக, சுஜிவ சேரசிங்க போன்ற பிரபல்யங்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது. இவா்களுக்கு எமது விருப்பு வாக்குளும் சேர உள்ளது.
எஞ்சியுள்ள 3 ஆசனங்களில் நம்மவா்களும் உள்வாங்கப்படல் வேண்டும். கொழும்பு மாவட்டம் ஒரு பாரிய பிரதேசம் அவிசாவளை தொட்டு பேலியகொட -கடுவலை- மட்டக்குழி தொட்டு மொரட்டுவை வரையில் இப்பாரிய பிரதேசத்தில் நம்மவா்கள் பல்வேறு பகுதிகளில் பிண்னிப் பினைந்து வாழ்கின்றனா். விருப்பு வாக்குகளுக்காக இப்பிரதேசங்களுக்கெல்லாம் ஒரு வேட்பாளா் அலைந்து திரிய முடியாது.
இந்த நாட்டில் நமக்கு உள்ள ஒரே ஒரு உரிமை வாக்குரிமை கொழும்பில் வாழ்கின்ற முஸ்லீம்கள் இதில் அக்கரை காடடுவதில்லை. வாக்களிக்க கணிசமான முஸ்லீம்கள் செல்வதில்லை. அக்கரை செலுத்துவதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் நமது உரிமையை சரிவரச் செய்தால் நிச்சயம் நமது பிரநிதித்துவம் கிடைக்கும். அதுவே எமது சக்தியாகும்.
மக்கள் ஜக்கிய முன்னணியில் 6 ஆசனங்களும் ஜே.வி.பி 2 ஆசனங்களும் கிடைக்க உள்ளன. அத்துடன் சரத் பொண்சேகா மட்டும் வர வாய்ப்பு உள்ளது.