அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வருகை எங்களுக்கு பிரச்சனை கிடையாது – நசீர்

கவர் போட்டோ

அஹமட் இர்ஸாட்.

 

எங்களுடைய கோட்டைக்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது நுளைந்து தேர்தலில் களமிறங்கியமையானதை பார்க்கின்ற பொழுது அவர்களினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட வென்றெடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இங்கிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஒருபோதும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க தயாரான நிலை இல்லை. ஆகவே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வரவானது எங்களுக்கு எவ்விதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்த போவதில்லை என அட்டாளைச்சேன சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான நசீர் நேர்காணலின் பொழுது மெற்சொன்ன கருத்தினை தெரிவித்தார். மாகாண சபை உறுப்பினர் நசீருடனான முழுமையான நேர்காணலும் காணொளியும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:-அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்கப்படாமல் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரசினால் ஓரம் கட்டப்படுவதற்கான காரணம் என்ன?

நசீர்:- ஓற்றுமையில்லா நிலைமை கணப்பட்டதனாலேயே அட்டாளைசேனைக்கு கடந்த காலங்களில் பிரநிதித்துவம் கொடுகப்படாமைக்கு முக்கிய காரணமாக நான் பார்க்கின்றேன். 30வருடங்காளாக எவ்வகையான எதிர்ப்புக்கள் கட்சிக்கு வந்தாலும் அட்டாளைச்சேன மக்கள் கட்சியுடனும், தலைமையுடனும் கைகோர்த்தவாறு 85வீதத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களித்து வருக்கின்றனர். அந்த வகையிலே அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் நாம், கட்சியின் தலைமையினால் எதிர்காலத்தில் நிச்சயம் வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையுடனும் இருகின்றோம். 

அஹமட் இர்ஸாட்:-இம்முறை அட்டாளைச்சேனையை பிரதி நிதித்துவப்படுத்தி ஏன் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படவில்லை.

நசீர்:- யானைசின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதினால் தொகுதிகளுக்கென்று ஒரு வேட்பாளர் களமிறக்கப்பட்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசானது மரச்சின்னத்தில் களமிறங்கியிருந்தால் நிச்சயமாக அட்டளைசேனையை பிரதி நிதித்துவப்படுத்தியும் வேட்பாளர்கள் களமிறக்கப்படிருப்பார்கள்.

அஹமட் இர்ஸாட்:- முன்னாள் சுகாதார அமைச்சரும் சம்மந்துறைத் தொகுதி வேட்பாளருமான மன்சூர் வகித்த மாகாண அமைச்சுப் பதவியான சுகாதார அமைச்சு பதவியானது உங்களுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு நிலவுக்கின்றதே?

நசீர்:- அட்டாளைச்சேனைக்கு கடந்த வருடங்களாக பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோசங்கள் எழுப்பட்பட்டு வருக்கின்ற நிலையில் வெற்றிடமாக உள்ள மாகாண சுகாதார அமைச்சுப்பதவி விடயத்தில் தேர்தலுக்கு பிற்பாடு கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுக்கு நாங்கள் கட்டுபட தயாராக இருக்கின்றோம் எனக் கூறிக்கொள்ள விரும்புக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- கடந்த மாகாண சபையில் அமைச்சர் அதவுல்லாவின் கோட்டையான அக்கறைப்பற்றில் அதிகமான வாக்குளை முஸ்லிம் காங்கிரசுக்கு பெற்றுகொடுத்த மாகாண சபை உறுப்பினரான தவத்தினை ஏன் இம்முறை அக்கறைப்பற்றினை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறக்காமல் முஸ்லிம் காங்கிரசனது அக்கறைபற்றில் மெளனம் காத்துவருக்கின்றது?

நசீர்:- நிச்சயமாக கடந்த மாகாண சபைத்தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அக்கறைப்பற்று மக்கள் முஸ்லிம் காங்கிரசின் கொள்கையினை மதித்தவர்களாக வாக்களித்திருந்தனர். அதே போன்று தவம் அக்கறைபற்றினை பிரதி நிதித்துவப்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தற்கு பிற்பாடு அக்கறைப்பற்றில் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி தலைதூக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.  இருந்தும் தவத்தினை களமிறகுவதற்கான முயற்சிகள் கட்சியின் தலைமையினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மூவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காகவே தவத்தினை இம்முறை அக்கறைபற்றியில் கட்சியானது களமிறக்கவில்லை.

அஹமட் இர்ஸாட்:-உங்களுடைய அன்மை ஊரான நிந்தவூரைப் பிரதி நித்தித்துவப்படுத்துகின்ற கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தொடர்ந்தேர்ச்சியாக பாராளுமன்ற தேசியப்பட்டியல் வழங்கப்பட்டு அடடளைசேனை அனாதையாக்கப்படுகின்றமைக்கான காரணம் என்ன?

நசீர்:- கட்சியின் ஐந்து உயர்பீட உறுப்பினர்கள் தேசியப்படியலுக்காக இம்முறையும் உள்வாங்கப்படுள்ளார்கள். தேர்தலுக்குப் பிற்பாடு தேசியப்பட்டியல் பிரதி நிதித்துவம் அட்டளைச்சேனைக்கு வங்கப்படவேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்ற நிலையில் கட்சியின் தலைமாயானது நிச்சயமாக சிறந்த முடிவினை எடுக்கும் என்ற நம்பிக்கையுடனும் நாங்கள் இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அட்டாளச் சேனையை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நீங்கள் கரையோர மாவட்ட கோரிக்கையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

நசீர்:- மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் ஆட்சியில் இருக்கும் பொழுதே எங்களுடைய கரையோர மாவடத்தின் தேவைப்பாட்டினை சமர்பித்திருந்தோம். அதற்குப்பிற்பாடு நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து வாக்களித்திருந்தோம். வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு கரையோர மாவட்டத்தின் அடிப்படை தவல்களின் மூலம் கொடுக்கப்பட்ட விடயங்கள் அரசாங்கத்தினால் மீள்பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அப்பொழுது இணைந்த வடகிழக்கில் தனியான அல்கின் யோசனையினையே முன்வைத்திருந்தார். தேர்தல் காலங்களில் மட்டும் பூதாகரமாக பேசப்படுக்கின்ற இக்கரையோர மாவட்ட கோரிக்கையானது அம்பாறை மாவ்வட்ட மக்களுக்கு உண்மையில் தேவைதானா?

நசீர்:- கிழக்கு மாகானத்தில் முஸ்லிம்கள் அதிகமான வாழ்வதினாலும் மட்டக்களப்பானது தமிழர்களுக்கான தனியான மாவட்டமாக இருக்கின்ற நிலையிலே வடமாகாணத்தில் இருக்கின்ற ஐத்து மாவட்டங்களும் தமிழர்களுக்கான தனியான மாவட்டங்களாக இருக்கின்றன. முஸ்லிம்களை அதிகாமக கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டத்தினை முன்வைக்கைன்றமையனது எவ்விதத்திலும் பிழை இல்லை என்பதே எனது கருத்தாகும்.

அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் நிலவுக்கின்ற முஸ்லிம்களின் காணிபிரச்சனையினை உங்களுடைய கட்சியானது எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றது?

நசீர்:- இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதியும் அரசாங்கமும் முஸ்லிம்களை பாதுகாத்தது என்ற ரீதியிலும் சமர்பிக்கப்பட்ட இருபதாவது திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கலின் இருபுக்கிகளை இழக்கக்கூடிய நிலைமை காணப்பட்டதினால் ஜானதிபதியும் பிரதமரும் தேர்தலுக்கு பிற்பாடு முஸ்லிம்களின் காணிப்பிரச்சனை சம்பந்தமாக எங்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவினை எடுபார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- யானைச் சின்னத்திலே முஸ்லிம்காங்கிரசானது போட்டியிடுவதினால் அது அம்பாறையில் போட்டிட்யுகின்ற சிங்கள சகோதரர்களையே பாராளுமன்றதிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையாக அமையும் என்ற கருத்தினை முன்னாள் உபவேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளருமான இஸ்மாயில் தெரிவித்திருந்தார். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நசீர்:- தேர்தலில் களமிறங்குகின்ற ஒவ்வொருத்தரினதும் கனவானது பாரளுமன்ற கதிரையில் உட்கார வேண்டும் என்பதாகவே அமையும். அந்த அடிப்படையில் வேட்பாளர்கள் தங்கது பிரச்சரா நடவடிக்கைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறான கருத்துக்களை உபவேந்தர் இஸ்மாயிலைப் போன்று வெளியிடுக்கின்றனர். 

அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தாயகத்தில் ஏன் கட்சியானது மரத்தில் களமிறங்காமல் யானையில் களமிறகியுள்ளது?

நசீர்:- உங்களுக்கு நன்றாகத் தெரியும்  1994ம் அண்டு சந்திரிக்கா அம்மையாரினை ஆட்சிக்கு கொண்டுவந்தது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசேயாகும். அதற்குப்பிற்பாடு ரணில் விக்கரம சிங்கவையும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆட்சி மற்றம் ஏற்படுத்தப் பட வேண்டும் என்பதற்காக மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆகவே முஸ்லிம்காங்கிரனால் எடுக்கின்றபடுக்கின்ற அரசியல் சார்ந்த முடிவுகள் அனைத்தும் சமூகத்தின் நன்மையினை கருத்தில் கொண்டு எடுக்கப்படுக்கின்ற முடிவுகளாகவே இருக்கின்றன.

அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரஸ் உறுவாக்கப்பட்ட மண்ணில் பிறந்தவர் என்ற வகையில் உங்களுடைய பார்வையில் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் அஸ்ஸஹீத் எம்,.எச்.எம்.அஸ்ரப்பா அல்லது பதினைந்து வருடங்களாக பல பிரச்சனைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரசினை வழிநாடத்தி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துவரும் அப்துர் ரவூப் ஹக்கீமா சிறந்தவர்?

நசீர்:- அல்லாஹ்தான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை இன்று வரைக்கும் சதிகாரர்களின் சூழ்ச்சியில் இருந்து பாதுக்கத்து வருக்கின்றான்  என்பதனை முதலில் கூறிகொள்ள விரும்புகின்றேன். கடந்த காலங்களில் அதாவுல்லா, றிசாட் போன்றவர்கள் இக்கட்சியினை அழித்தொழிக்க எடுத்த முடிவுகளை தனி ஒரு மணிதனாக நின்று அல்லாஹிவின் உதவியினால் ரவூப் ஹக்கீம் பாதுகாத்தமையினை நினைவு கூர்வதோடு, காலத்திற்கு ஏற்றவாறு முஸ்லிம் காங்கிரசின் தலைமைகளானது கட்சியினை வழி நடாத்திச் செல்கின்றது என்பதே உங்களது கேள்விக்கான எனது விடையாகும்.

அஹமட் இர்ஸாட்:- கடைசியாக அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எனற ரீதியிலும், கிழக்கு மாகான சபை உறுப்பினர் என்ற வகையிலும் வருக்கின்ற பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியினை கருத்தில் கொண்டு அம்பறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு எதைகூற விரும்புக்கின்றீர்கள்?

நசீர்:- கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மக்களுக்கு அழித்துள்ள வாக்குகளின் அடிப்படையில் இம்முறை முஸ்லிம் காங்கிரசினால் களமிறக்கபட்டுள்ள வேட்பாளர்கள் மூவரும் வெற்றியடைந்து விட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நாங்கள், மேலும் மக்கள் மத்தியில் எந்தவொரு ஐயப்பாடுகளும் இல்லாமல் நம்பிகையுடன் இருப்பதற்காக ஒட்டுமொத்த அம்பாறை மாவ்வட்ட முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

.