இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சி!

 

aஇந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடையுமென பொருளாதார விற்பனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னராக மே மாதத்தில் எதிர்பார்க்கபட்ட 0.8% பொருளாதார வளர்ச்சியை இங்கிலாந்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் இதன் பாதியளவே பெறப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டிட நிர்மாணம் ஆகிய துறைகளின் வளர்ச்சி வேகமும் குறைவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் இங்கிலாந்தின் பொருளாதாரம் 2.5% இனால் வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலைகள் குறைவடைந்துள்ளமையால் இங்கிலாந்தின் பணவீக்கமானது பூச்சியமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இங்கிலாந்து வங்கியானது 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் வட்டி வீதத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.