மன்சூரின் கருத்தை தான் வன்மையாக கண்டிகின்றேன் : மாகாண சபை உறுப்பினர் அமீர் !

11838864_760298124080515_1609137368700636819_o-2_Fotor_Collage_Fotor

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசம் கடந்த ஒருதசாப்தகாலமாக இழந்து நிக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கோடு இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது நல்ல பன்புள்ள மக்களை நேசிக்கின்ற எமது ஊரை ஆட்சி செய்யக்கூடிய ஒரு ஆளுமைமிக்க ஒருவரை தெரிவு செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறி ஒதுங்கி இருக்கின்றேன்.
இவ் வேளையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் சம்மாந்துறை தொகுதியில்; பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் வெளிப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற பொதுக் கூட்டங்களில் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் முஸ்லீம் காங்கிரசுடன் இணையவுள்ளார் இவர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றார் என்ற மன்சூரின் கருத்தை தான் வண்மையாக கண்டிப்பதாகவும் இது உண்மைக்கு புறம்பான பொய்ப்பிரச்சாரம் எனவும் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் இன்று (04) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான பொய்பிரச்சாரம் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரசின் வங்குரோத்து அரசியலையும் அஸ்தமன அரசியலையும் தெளிவாக எடுத்தக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய நாகரீகமான அரசியல் தீர்மாத்துக்கு முறனாக தனக்கு சாதகமாக மக்கள் மத்தியில் என்னுடைய முடிவினை அறிவித்து வாக்கு கேட்கின்ற வங்குரோத்து நிலைமைக்கு சகோதரர் மன்சூரின் நிலைமை மாறியுள்ளது. 
இந்த விடயம் என்னைப் பொறுத்த வரையில் சுயநினைவிழந்;த சொந்த புத்தியில் இல்லாத நிலையில் வெளியிடப்பட்ட கருத்தாக நான் கருதுகின்றேன்.
மக்களுக்கு தெரியும் மக்களுக்கு சேவகம் செய்யக் கூடியவர்கள் யார் கபளிகரம் செய்யக்கூடியவர்கள் யார் என்பது பற்றி.

கடந்த தேர்தலில் எமது மக்கள் நல்லாட்சிக்காக எவ்வாறான முடிவுகளை மேற்கொண்டார்களோ அதே போன்று இம் முறையும் நல்லாட்சி புரிபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை நான் தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்  அவர்களினால் குர்ஆனையும் ஹதீசையும் வைத்து உருவாக்கப்பட்;ட சிறி லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைமையும் அதன் தொண்டர்களும் பொய்களையும் புரட்டுக்களையும் மக்கள் மத்தியில் பரப்புவது வேதனைக்குரிய விடயமாகும்.
கட்சியின் தலைமை இருக்கத்தக்கதாக இவ்வாறான பொய்வதந்திகளை வாக்குகளை பெற்றுக் கொள்ளவதற்கான மேற் கொள்வது கேவலமான செயற்பாடாகும் எனவும் அமீர் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகளும் தொண்டர்களும் காலத்துக்கு காலம் மக்களை சூடாக்கும் அரசியல் கலாசார பாரம்பரியத்தை செய்து வருகின்றமை எமக்கு புதிதான விடயமல்ல விபச்சார அரசியல் செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய காரியமுமாகாது.
நாகரீகமான முறையில் அரசியல் செய்து மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து. நல்லதோர் எதிர்காலத்தை எமது மண்னுக்கும் எமது சமூகத்துக்கும் ஏற்படுத்த சம்மாந்துறை மக்கள் நிதானமாக சிந்தித்து இன்னும் இன்னும் ஏமாருகின்ற கூட்டமாக இல்லாமல் ஆளுமைமிக்க தலைமைகளை தெரிவு செய்ய எமது மக்கள் ஒன்றினைய வேண்டும் எனவும் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.