யுத்­தத்தின் மூலம் பிர­பா­கரன் அடைய நினைத்­ததை இன்று அர­சியல் சாணக்­கி­யத்தின் மூல­மாக அடைய முயற்­சித்து வரு­கின்­றனர் – கோத்தபாய

images

யுத்­தத்தின் மூலம் பிர­பா­கரன் அடைய நினைத்­ததை இன்று அர­சியல் சாணக்­கி­யத்தின் மூல­மாக அடைய முயற்­சித்து வரு­கின்­றனர். நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்த ஆயுத கலா­சா­ரத்தை இன்று மீண்டும் ஆரம்­பித்­துள்­ளனர் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார். வடக்கை மீண்டும் எமது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்து புலி­களின் ஆக்­கி­ர­மிப்­பினை முழு­மை­யாக அழிக்­க­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் விமல் வீர­வன்­சவின் “ யுத்தம் இல்­லாத நாடு- நல்­லாட்­சியின் பின்னர் இரண்­டாகும் நிலை “ என்ற புத்­தக வெளி­யீடு நேற்று விஹா­ர­ம­கா­தேவி உள்­ளக அரங்கில் நடை­பெற்­றது. இதில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
வெள்ளை வேன் கடத்­தல்கள், பாதாள உலக கொள்­ளைக்­கூட்டம் அனைத்தும் எம்­மிடம் தான் உள்­ள­தென எம்மை விமர்­சித்­த­வர்கள் இன்று ஆட்­சியை அமைத்­துள்­ளனர்.

ஆனால் இவர்­களின் ஆட்­சியில் என்ன நடக்­கின்­றது. இன்று பட்­டப்­ப­கலில் துப்­பாக்கிச் சூடும், கடத்­தல்­களும் தாக்­குதல் நட­வ­டிக்­கை­களும் நடை­பெ­று­கின்­றன. நல்­லாட்சி என்ற இந்த ஆட்­சியில் ஒரு தெளி­வான கொள்­கைத்­திட்டம் இல்­லாது போயுள்­ளது. தமது வேலைத் திட்­டத்தை தெளி­வாக இவர்­களால் குறிப்­பிட முடி­யாது. நல்­லாட்­சியில் இவர்­களின் வேலைத்­திட்­டங்கள் நாட்டில் முழு­மை­யாக சென்­ற­டை­ய­வில்லை. எமது ஆட்­சியில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் வடக்கில் உண்­மை­யான அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு தமிழ் மக்­களின் உண்­மை­யான ஜன­நா­ய­கத்தை நாம் பெற்றுக் கொடுத்தோம். அதேபோல் அனா­வ­சிய காணி­களை நாம் தமிழ் மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்தோம். ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் நாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்­த­வில்லை.

ஆனால் இன்று நாட்டின் தேசிய பாது­காப்பு மிகவும் அச்­சு­றுத்­த­லான நிலை­மையில் உள்­ளது. அர­சியல் சுய­நல வேலைத்­திட்­டங்­களை கருத்தில் கொண்டு நாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தி விட்­டனர். நாம் புலிகள் பயங்­க­ர­வாத இயக்­கத்தை அழித்த போதிலும் புலி­க­ளினால் போசனை வழங்­கப்­பட்ட அர­சியல் புலி­களை நாம் அழிக்­க­வில்லை. அதன் விளைவு இன்று ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் மீண்டும் பிரி­வி­னையின் பக்கம் நகர ஆரம்­பித்­துள்­ளது. எமது கட்­டுப்­பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இருந்­த­போது நாடு அமை­தி­யாக இருந்­தது. ஆனால் இன்று நாம் இல்­லாத நிலையில் மீண்டும் நாட்டில் கிளர்ச்­சிகள் உரு­வாக ஆரம்­பித்­துள்­ளன.

கடந்த பத்து ஆண்­டு­களில் நாம் நாட்டை சரி­யான பாதையில் கொண்டு சென்­றுள்ளோம். தேசிய பாது­காப்பை சரி­யான வகையில் பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். ஆனால் இந்த ஏழு மாத­கா­லத்தில் நாடு மிகவும் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. நாம் இந்த நாட்டில் ஆயுத கலா­சா­ரத்தை முழு­மை­யாக தடுத்­தி­ருந்தோம். சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­களை இலங்­கையின் விட­யங்­களில் தலை­யி­ட­வி­டாது தடுத்­தி­ருந்தோம். ஆனால் இப்போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது.

மீண்டும் நாட்டில் ஆயுத கலா­சாரம் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. தமிழ்ப் புலிகள் மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளனர்.ஆகவே எமது கட்­டுப்­பாட்டில் எவ்­வாறு நாடு இருந்­ததோ அதே நிலை­மை மீண்டும் உரு­வாக வேண்டும். வடக்கை எமது கட்­டு­பாட்­டுக்குள் கொண்­டு­வந்து புலி­களின் தலை­யீட்டை முழு­மை­யாக அழிக்க வேண்டும். யுத்­தத்தின் மூலம் பிர­பா­கரன் அடைய நினைத்­ததை இன்று அர­சியல் சாணக்­கி­யத்தின் மூல­மாக அடைய முயற்­சித்து வரு­கின்­றனர்.

நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்தில் நெருங்கிவிட்டனர். அவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும். மக்கள் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டுமென்றால் நாட்டின் சிங்கள மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.