நாட்டை தொடர்ந்தும் நேரான பாதையில் இட்டுச்செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட உள்ளதாக அமைச்சரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று மஹர பிரதேசத்தில் அமைந்துள்ள அர்ஜுன ரணதுங்கவின் கம்பஹா மாவட்ட தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நடைபெறவுள்ள தேர்தல் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான தேர்தலாகும். அதாவது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையிலான போட்டியாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எப்போதும் நல்ல மனிதர்களுடனேயே இருந்துள்ளார்.இதை வேறுவிதத்தில் சொல்வதென்றால் அவர் எப்போதும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இருந்தவராவார்.
இன்று நல்லாட்சி அரசாங்கம் இருப்பது அவரது தலைமை யிலாகும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்கு பிரதானமாக செயற்பட்டவரும் அவராவார். நாட்டை தொடர்ந்தும் நேரான பாதையில் இட்டுச்செல்வதற்கு அவர் நல் லாட்சி அரசாங்கத்துடனே இருக்கின்றார்.அவருடைய ஆசிர்வாதம் எங்களுக்கு இருக்கின்றது. அத்துடன் எதிர்கால பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அவர் எங்களுக்கு தெளிவூட்டினார் என்றார்.