தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சுமார் 13 இலட்சம் ரூபா பெருமதியான மருந்து வகைகள் கிடைக்கப்பெற்றுள்ளது!

4-2_Fotorஅபு அலா 

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து வகைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று காலை (02) தெரிவித்தார்.

சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரிடம் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கினங்கவே சுமார் 13 இலட்சம் ரூபா பெருமதியான இந்த மருந்து வகைகள் நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு கிடைக்கப்பெற்ற மருந்துவகைகளில் யூனானி மருந்துகள் போதுமானளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  தெரிவித்தார்.

கடந்த மாதங்களாக நிலவி வந்த மருந்து தட்டுப்பாட்டினால் வெளிநோயாளர்களின் வருகை குறைவடைந்து காணப்பட்டதாகவும், தற்போது வெளிநோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த மருந்துகள் இவ்வருட இறுதிவரை போதுமானதாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.

4-2_Fotor