இன்று தொடரை சமன் செய்யுமா இலங்கை ?

 

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி தோல்வி கண்­டுள்ள நிலையில் இன்று இரண்­டா­வது போட்­டியில் இவ்­விரு அணி­களும் மோது­கின்­றன.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் பாகிஸ்தான் அணி ஏற்­க­னவே டெஸ்ட் தொட­ரையும் ஒருநாள் தொட­ரையும் கைப்­பற்­றி­யது. அந்த வெற்றிக் களிப்பில் நேற்று முன்­தினம் 20 ஓவர்கள் தொடரில் பங்­கேற்­றது. ஏற்­க­னவே 2 தொடர்­க­ளையும் இழந்த நிலையில் இலங்கை அணி 20 ஓவர் தொடரைக் கைப்­பற்றும் என்­ப­துதான் அனை­வ­ரு­டைய எதிர்­பார்ப்­பா­கவும் இருந்­தது. ஆனால் இலங்கை அணி ஏமாற்­றி­விட்­டது.

இந்­நி­லையில் இந்தத் தோல்­விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் 20 ஓவர் கிரிக்­கெட்­டிற்­கான அணித்­த­லைவர் லசித் மலிங்க தெரி­வித்­துள்ளார்.
ஆர்.பிரே­ம­தாஸ சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 175 ஓட்­டங்­களைச் சேர்த்­தது. 176 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்­திய இலங்கை அணி 29 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. இதில் இலங்கை அணித்­த­லைவர் மலிங்க ஓட்­டங்­களை அள்ளிக் கொடுத்தார். அவர் 4 ஓவர்­களில் 1 விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் 46 ஓட்­டங்­களை விட்டுக் கொடுத்தார்.

இது பற்றி மலிங்க கூறு­கையில், நான் சிறப்­பாக பந்து வீச­வில்லை. நான் அனு­பவ வீர­ராக இருந்­தி­ருந்தால், அதற்கு ஏற்­றதை அணிக்கு செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்­ய­வில்லை. அதே சமயம் மற்ற வீரர்­க­ளையும் குறை­கூற முடி­யாது. அவர்கள் இளம் வீரர்கள். தற்­போது தான் கற்றுக் கொண்டு வரு­கி­றார்கள்.

கப்­பு­கெ­தர மற்றும் புது­முக வீரர் சிறி­வர்த்­தன ஆகி­யோர்­களின் அதி­ரடி ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கும் வித­மாக இருக்­கி­றது. இதில் சிறி­வர்த்­தன போட்­டியின் முடிவை தனி ஆளாக மாற்றக் கூடி­யவர்.

மேலும், அடுத்த போட்­டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

இன்று ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடை­பெறும் இரண்­டா­வது 20 ஓவர் போட்­டி­யிலா­லா­வது இலங்கை வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்
திருந்து பார்ப் போம்.