ஹரீஸ் அன்று தலை அசைத்திருந்தால் இன்று மந்திரியாகி இருப்பார்.

ஹரீஸ் அன்று தலை அசைத்திருந்தால் இன்று மந்திரியாகி இருப்பார்.

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்

தான் அரவணைத்துக் கொண்ட அரசியல் ஊடாகத் தனது சமூகத்துக்கு தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ‘ரோல்மாடலாக’ நிறைய சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுகளோடு களங்காணும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி அவரகள் உள்ளும்-புறமும் தனக்கெதிராக நடக்கும் சதி முயற்சிகளினால் மனம் நொந்துபோய் சில சந்தர்ப்பங்களில் மக்களுடன் பேசுவதற்க்குக் கூட கூச்சப்படுகின்றார்.

மனநிறைவோடு மக்கள் பணிசெய்து மறைந்து போனவரின் வாரிசு என வலிந்து மக்கள் தந்த நல்லெண்ணத்தை நெறிப்படுத்த தன்னிடம் வழங்கப்படும் ஆலம்பழம் போன்ற அதிகாரம் அவருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்பதை ஹரீஸ் உள்ளூர அறிந்தும் இருக்கிறார்.

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமை, இருப்பு,அபிவிருத்தி,சகஜீவனம் எல்லாம் அவரை அதிகம் சவாலுக்குட்படுத்தி வருகின்றன. அவரது வாக்கு வங்கியைப் பின்தள்ளி அவரின் முன்னிலைத் தன்மையை புறந்தள்ளிட சொந்த ஆகட்களே கடைபோடுவது அவர்முன்னுள்ள சவால்களில் முதன்மையான ஒன்றாகும்.

இவ்வாறான பின்தள்ளல்கள், பிரதானித்தன்மை என்ற மக்களின் எண்ணத்தை கானல் நீராக மாற்றுவதில்; உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை ஒற்றுமைப்பட்ட நிலையில்; பனிப்போர் ஒன்றையும் நடாத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் இன்றுள்ள நிலைமை அவரை இமயமலை வந்து தள்ளி விட்டாலும் அதனை முண்டு கொடுக்க மக்கள் சக்தி மலையின் முன்னால் வீறுகொண்டு நிற்கின்றது என்பதை மக்கள் நடமாடும் இடங்களெல்லாம் பறைசாற்றி நிறகின்றது.

கல்முனை என்ற ஊரை காத்திட வேண்டும் என்ற உயிரோட்டமான எண்ணத்தால் அதி;கமதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஹரீஸே முதல் நபராகக் கூட இருக்கலாம்.ஊரைச் சொல்லிக்கொண்டு நாளைக்கடத்தவும் கூடாது.முடியுமானால் சகோதர சமூகம் ;நல்லிணக்கமொன்றோடு இணக்கப்பாட்டுக்குள் வந்தாலும் அதனையும் நீங்கள் பரிசீலனை செய்யவேண்டும்.

ஏனெனின் இன்றில்லாவிடினும் ஒருகாலத்தில் பெரும்பான்மைச் சமூகத்தின் தீவிரத்தன்மை கொண்டவர்கள் குடியேற்றங்களைக்கூட ஏற்படுத்தலாம்.பின்னர் இருதரப்பும் விறகுக் கொள்ளியால் தலை சொறியும் நிலை ஏற்படும்.அந்தவேளை தலைவர்களும் மறந்து மாய்ந்து போய்வடுவார்கள்.

ஒவ்வொரு புதிய தேர்தல் ஏற்பாடுகளின் போதும் ஹரீஸைத் தடுமாற்றத்துக்கள் தள்ளி விட்டு அவரின் முன் நகர்வை வழக்கிடச் செய்து தனிமைப்படுத்தி விடவும், சிலவேளைகளில் தன்னிச்சையாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாதபடி சூழ் நிலைக்; கைதியாக்கிடவும் திட்டங்கள் வகுக்கப்படலாம்.

ஹரீஸைப் பொறுத்தவரை அவர் ஒருபோதும் எம்.பி.என்ற பதவியைத் தந்திரமாகப் பெறமுயற்சித்தவரல்ல.அவர் நேர்மையான ஜனநாயகப் போட்டி அரசியலேய விரும்பியவராவார் . -மக்கள் ஆதரவுடனான பதவியையே அவர் நாடினார் என்பதுற்கு பின் வரும் சம்பவமொன்றை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். தலைவரின் மறைவையடுத்து 2001ம் ஆண்டென நினைக்கின்றேன் தலைவரின் துணைவியார் பேஃரியல் அஷ்ரப் அவர்கள் அதாவுல்லா அவர்கள்,அன்வர் ;இஸ்மாயில் ஹரீஸ் ஆகியோர் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது ஹரீஸ் தேசிய பட்டியலில் வருவதா அல்லது அன்வர் இஸ்மாயில் வருவதா? என்ற நிலை வந்தபோது இருவருமே போட்டியிடுவதையே விரும்பினர்.யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கும்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போது ஹரீஸ் போட்டியிட அன்வர் இஸ்மாயில் இணங்கினார்.;

ஹரீஸ் என்னைப் போன்றவர்களிடம் ஆலோசனையும் கேட்டார் நான் அவரிடம் தேசிய பட்டியலில் வந்தால் இலேசாக வந்திடலாம் என்று கூறினேன்.பார்ப்போம் என்றவர் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதைத் தாம் விரும்புவதாகக் கூறினார்.அந்தத் தேர்தலில் பேரியல் அவர்களும் அதஉல்லாஹ் அவர்களும் வெற்றி பெற்றனர்.

வாக்குறுதி அளிக்கப்பட்டது போன்று அன்வர்.இஸ்மாயில் தேசியப்பட்டியல் எம்பியாகி பிரதி அமைச்சருமானார்.ஹரீஸ் அவர்கள் எமது தரப்புப் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று அவர் முழு மந்திரிப் பதவியைக் கூடப் பெற்றிருக்கலாம்.ஆனால் அவரது சுயகௌரவமஅவரைத் தடுத்து விட்டது.மேடையில் மட்டும் முகத்தைக்காட்டி வெறுங்கையோடு பெறவேண்டியதை அவர் இழந்தது அவர் தவறியவற்றில் இதுவும் ஒன்றாகும்.;

தற்போது ஹரீஸை இராஜாங்க அமைச்சைப் பொறுப்பெடுக்குமாறு பிரதர் ஹெலி அனுப்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அது எப்படியிருந்த போதிலும் 2002அல்லது 2003ம் ஆண்டென எண்ணுகின்றேன்.

ஹரீஸ் என்னை சம்மாந்துறைக்கு வருமாறு அழைத்தார்.அங்கு சென்று அவரது கருத்துக்களை வீடீயோ பதிவு செய்து கொண்டிருந்தேன்.அப்போது பிரதமர் ரணில் அனுப்பிய ஹெலி வந்திருந்தது. (தேசிய பாடசாலையில்)ஆனால் இவர் செல்லாமல் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.அப்போது பிரதமரிடமிருந்து கைபேசிக்கு அழைப்பு வந்தது. ஹரீஸ் அவர்களிடம் விபரத்தைக் கேட்டேன்.அவர் என்னிடம் ‘என்னுடன அரசியல் சிந்து விளையாட்டெல்லாம் விளையாட வேண்டாம் என்று கர்ஜிப்பதாகக் கூறினார் ‘ என்றார்;.

இன்று பிரதமர் ஹரீஸிடம் என்ன கூறிக் கொண்டிருப்பாரோ தெரியாது. ஆனாலும் ஹரீஸ் அர்கள் என்உயிர் மூச்சோடு விளையாட வேண்டாம் சேர் என்று பிரதமரிடம் கூறுவாரோ! என்று எண்ணத்தோன்றுகின்றது.

Sent from my iPhone