ஹஜ் விவகாரம்- சவூதி இலவசமாக வழங்குவதை பங்கிடுவதிலும் பாரபட்சம்!

ஹஜ் விவகாரம்- சவூதி இலவசமாக வழங்குவதை பங்கிடுவதிலும் பாரபட்சம்!

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்

இலங்கையிலிருந்து வருடாந்தம் ஹஜ் கடமைகளுக்காகச் செல்லும் ஹாஜிகள் தவிர சவூதி அரசின் அனுசரணையுடன் முஸ்லிம் சமய கலாசார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களால் ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக லேக் ஹவுஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும்; தெரிவு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் முன்னர் ஹஜ்ஜூக்குச் செல்லாதவராகவும் (ஒப்பீட்டளவில்–ஹஜ்ஜூக்கு செல்ல ஆவலுடையவராகவும் வசதி வாய்ப்புக் குறைந்தவராகவும்)இருக்க வேண்டும்.

இந்ந அடிப்படையில் நல்லாட்சியில் 2015ம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தெரிவு அமைச்சினூடாகத்தான் மேற்கொள்ளப்பட்டதெனின்.பின்வரும் வினாக்களைத் தொடுக்கவிரும்புகின்றேன்.

ஒரு பெண்மணி (சட்டரீதியிலான பாதுகாவலர்)மஹ்ரமி இல்லாமல் சவூதிக்குள்-(மக்காவுக்குள்)நுழைய சவூதி அரசு அனுமதி அளிக்கும் என்று அமைச்சு எண்ணியதா?இவருக்கான பயண ஏற்பாடுகள் தயாரான நிலையில் மஹ்ரமி தேவை என்ற பிரச்சினை ஏற்பட்டு அவருடைய கணவரான உமர்லெப்பை யாக்கூப் என்பவருக்கு மேலும் ஒரு ஹஜ் கோட்டா-அனுமதி வழங்கப்பட்டு மனைவியுடன் கணவன் சென்றுள்ளார்.

ஏற்கனவே ஓரிரு தடவைகள் இலவசமாக ஹஜ்ஜூக்குச் சென்று கடமைகளைப் பூரத்தி செய்த இவருக்கு மனைவியின் பொருட்டால் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தாலும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை கட்டுப்பாட்டாளராக இருந்த பாத்திமா றினூஸியாவுக்கு கடந்த ஓரிரு வருடந்களுக்கு முன்னர் ஹஜ்ஜூ செய்வதற்கான வாய்புக் கிட்டியபோது அவர் சமய கலாசார அமைச்சு மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி தன்னோடு வருவதற்கு மஹ்ரமியாகக் தனது கணவருக்கு அனுமதி வழங்கி ஹஜ்ஜூக் கோட்டா ஒன்றை வழங்குமாறு கேட்டபோதும் அவருக்கு சலுகை காட்ட மறுக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் பார்த்தால் யாக்கூப் தம்பதியினருக்கு ஒரு நீதியும் பாத்திமா றினூஷா அவர்களுக்கு அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. றினூஷாவுக்கு சலுகை காட்டாமல் விட்டதுபோல் யாக்கூப் தம்பதியினருக்கும் காட்டாமல் விட்டிருந்தால் இதுவரை ஹஜ்ஜூக்குச் செல்லாத ஒருவர் அல்லது இருவர் பயனடைந்திருப்பார்.தொடர்ந்தும் ஒருவர் சாக்குப் போகுச் சொல்லி இலவசமாக ஹஜ்ஜூ செல்வதைத் தடுத்திருக்கலாம்.

வசதி உள்ளவர் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ்ஜூக் கடமையை நிறைவேற்றினால் போதும் என்று இஸ்லாம் கூற பேராசை பிடித்த சிலர் சவுதி அரசு இலவசமாக வழங்கும் ஹஜ் கோட்டாவினை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டம் போட்டு கையகப் படுத்திக் கொள்வது என்ன நியாயமிருக்கிறது.?