வன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

கலாபூஷணம்–மீரா

அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு வன்முறையாளர்களால் தனது சமூகத்துக்கு ஏற்பட்ட அவலங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது வன்னிமான் சகோதரன் றிஷாட பதியுதீன் கண்ணீர் சிந்துவதைக் கண்டபோது மிகவும் கவலையாக இருந்தது.

இந்தக் கண்ணீர்த் துளிகளை வைத்து அவர் கோளை என்றும்.பதவி பறிபோகப் போகுது என்று பயந்து விட்டார் என்றும் நம்மவர்களிற் சிலர் சொல்லக் கூடும்.எவர் எதைச் சொன்னாலும் அதை யாரும் தட்டிக் கேட்க முடியாதுதான்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் கிராண்பாஸில் காடையர்களால்  மேற் கொள்ளப்பட்ட அடாவடித்தனத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கண்டதும் பொங்கி எழுந்து சிங்கமென சீறிப்பாய்ந்து கடமையைச் சரியாகச் செய்யாத ‘அந்தப் பெரிய’அதிகாரியை ராஜினாமாச் செய்யச் சொன்ன தோரணையும் அதனால் சினங்கொண்ட ஆட்சித் தலைவரின் கர்ஜனையையும் யாரால் மறக்க முடியும்?

இதன் பின்னணிக் காரணிகள் பின்னாட்களில் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்ததென்பதையும் நாம் மறந்து விட்டோமா?

அரசியல் கட்சிகள்-தலைவர்கள் கருத்தாடல்கள் வசைபாடல்கள் சாடல்கள்.சந்தர்ப்பவாதங்கள் இவை யாவும் தளங்களில் காணப்படுபவைதான்.

இப்போ நாடெல்லாம் றிஷாட்டுக்கெதிரான சுவரொட்டிகள் பதாதைகள்.இன்னான் பதவியை நீக்கிய இல்லாள் மனைபுகுந்து இன்புற்றிடக் கட்டளை.

ஈமானியனின் கண்கள் கசிகின்றன.நாம் கைகட்டி நிற்போமா? இல்லை அவனுக்காய் பிராத்திப்போமா?

இவன் மேல் பத்தென்ன நூறென்றாலும் இவைகள் அபாண்டங்கள்தான் என்பதை ஈமானியர்கள் மட்டுமல்ல இந்த நாட்டு நான்கின மக்களும் ஒன்றிணைந்து நிரூபிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.

றிஷாட்டைக் குத்தி வெளியே வருகின் அம்புகள் ஊடகத்தானையும் ஊடறுத்துச் செல்லுகின்றது.

றிஷாட் பதியதீன் இப்போது தனியாள் அல்ல.ஆளும் அரசே அவர் பின்னால் நிற்கிறதாம்.எதிரணியினரால் அவர் பிரபல்யமடைகிறார்.முஸ்லிம்கள் மனங்களிலும் ஆழமாகப் பதிவாகின்றார்.ஈமானியர்களுக்குள் இப்போது குத்து வெட்டுக்கள் வேண்டாம்.

Sent from my iPhone