இந்திய பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முறைப்படுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது :மாநாட்டில் மோடி உரை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஏசியான் வணிக மன்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘நிதி பரிவர்த்தனைகளிலும் வரி விதிப்புகளிலும், எங்களது தனித்த அடையாள முறையைப் பயன்படுத்துகிறோம் இதன் முடிவுகள் ஏற்கனெவே தெரிந்ததுதான்’ என ஆதார் பயன்பாடு குறித்து அவர் கூறினார்.

மேலும், ‘இந்திய பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முறைப்படுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது’ எனவும் பேசினார். நடைமுறையில் இல்லாத 1200 சட்டங்களை நீக்கியும், முதலீட்டுக்கு தேவையான வகையில் சட்டங்களை மாற்றியமைத்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஏசியான் கூட்டமைப்பில் உள்ள எல்லா நாடுகளுடனும் இந்தியா சுமூகமான அரசியல் உறவுகளை கொண்டுள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.