புதிய ஆத்தி (கே)சூடி

Mohamed Nizous

அ- அரபியிடம் நிதி சேர்
ஆ- ஆட்டையைப் போடு
இ- இரண்டு மடங்கு செலவு காட்டி
ஈ- ஈமான் வளர்க்கப் பாடு படு
உ- உள்ளடி அடி
ஊ- ஊழல் செய்
எ- எடுக்கின்ற கமிஷனில்
ஏ- ஏழெட்டுத் தொழில் தொடங்கு
ஐ- ஐயாமாரப் பிடி
ஒ- ஒய்யாரமாய்த் திரி
ஓ- ஓஹோண்ணு வாழ்

அ- அன்பாய்ப் பேசு
ஆ- ஆசை காட்டு
இ- இவவளவு போட்டால்
ஈ- ஈட்டுகிற லாபத்தில்
உ- உள்ள காசு பணம்
ஊ- ஊதிப் பெருக்கும் என்று
எ- எப்படியோ கதைத்து
ஏ- ஏமாற்றிப் பணம் பெறு
ஐ- ஐம்பதாயிரம் லாபம்
ஒ- ஒரே கிழமையில் கொடு
ஓ- ஓர் மாதம் கழிந்த பின்

அ- அந்த முதல் போதாதுன்னு
ஆ- ஆட்களைச் சேர்க்கச் சொல்
இ- இருக்கின்ற நகைகளையும்
ஈ- ஈடு வைத்துத் தரச் சொல்
உ- உள்ளதெல்லாம் சுருட்டி
ஊ- ஊரை விட்டு ஓடு
எ- எங்கோ ஒரு நாடு சென்று
ஏ- ஏழெட்டு வருடம் இருந்து
ஐ- ஐயா மன்னிச்சிடு என்று
ஒ- ஒரு நாள் ஊரு வா
ஓ- ஓஹோண்ணு வாழ்