டோரிஸ் புயல் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் மத்திய பகுதியில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு !

டோரிஸ் புயல் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் மத்திய பகுதியில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதன் காரணமாக விமான மற்றும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், வீதிகள் பலவும் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heathrow விமான நிலையத்தில் இருந்து 77 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலை காரணமாக 10 விழுக்காடு விமான சேவைகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் பலரும் பாரிய அசௌகரிங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், விமான நிலையத்தில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, பிரித்தானியாவின் மத்திய பகுதியில் டோரிஸ் புயல் மணிக்கு 94-ல் இருந்து 100 கி.மி வரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு இருக்கும் எனவும், வார இறுதி முழுவதும் பலத்த காற்றும் மழையும் தொடரக் கூடும் என அந்நாட்டு என வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அட்லாண்டிக் கடலில் உருவான டோரிஸ் புயல் பிரித்தானியாவை நோக்கி நகருவதை வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.