நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்..

நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள், மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்க வேண்டும். அதன்பிறகே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் ஜல்லிக்கட்டு ஆதரவு இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உயர்அதிகாரிகள் இதற்கான பணிகளை விரைந்து செய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

மேலும் மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.