யோஷித்த ராஜபக்சவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி , ஏமாற்றத்தில் மஹிந்த !

mr_court_1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, யோஷித்த ராஜபக்சவை விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டு, கடுவலை நீதவான் வழங்கிய உத்தரவு பிணை தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என கூறினார்.

இதனால், தமது தரப்பு வாதிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது எனவும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடியும் வரை தமது தரப்பு வாதிகளை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் எனவும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

mr_court_4

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச சட்டத்தரணி, கடுவலை நீதவானின் உத்தரவு பிணை தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது அல்ல எனக் கூறினார்.

எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், இது பிணை சட்ட ஏற்பாடுகளுடன் சம்பந்தப்படாது எனக் கூறினார்.

இதனால், யோஷித்த ராஜபக்சவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணைகளை மார்ச் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார், இதனால் ஏமாற்றத்துடன்  மஹிந்த  ராஜபக்சே நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார் .