எதிர்க்கட்சியினர் கிளர்ச்சிகளின் மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டம் : சஜீத் !

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.கிளர்ச்சிகளின் மூலம் ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

sajith-premadasa_Fotor
அண்மைய நாட்களில் இரண்டு தடவைகள் எதிர்க்கட்சியினர் தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், இதனால் எதாவது ஓர் வழியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான உடன்படிக்கை பாதகத்தை ஏற்படுத்தும் என போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான உடன்படிக்கை பாதகத்தை ஏற்படுத்தும் என போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் ஊடாக பெரும் எண்ணிக்கையிலனாவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டை அபிவிருத்தி செய்யும் முனைப்புக்களின் போது தீவக மனப்பான்மையில் இருப்பது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம், ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை விற்பனை செய்வதாக சில தரப்பினா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.