பொத்துவில் மக்கள் மத்தியில் ரஹ்மத் மன்சூர் – தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு!

unnamed (3)_Fotorசப்னிIM
நேற்று (29) மாலை பொத்துவிலுக்கு விஜயம் செய்த நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமாகிய  ரஹ்மத் மன்சூர் அங்கு பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தேர்தல் குழுவின் தலைவருமான எம்.எஸ்.வாசித் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. 
இதன்போது பொத்துவில் தேர்தல் களநிலவரம் பற்றி கேட்டறிந்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காகவும், இம்முறை அம்பாரை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள மூன்று வேட்பாளர்களையும் ஆதரிப்பது சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடினர்.
இதேவேளை,பொத்துவில் பகுதியில் குடிநீர் கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல் நிலையினை இன்று நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இணைப்புச்செயலாளரும், ஸ்ரீலங்கா முச்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாகத் தீர்த்துவைத்தார்.
பொத்துவில் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.வாசித் மேற்குறிப்பிட்ட முறைப்பாட்டினை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இன்று முதல் பொத்துவிலில் குடிநீர் கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது என்று ரஹ்மத் மன்சூர் மேலும் தெரிவித்தார். தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பொதுமக்கள், கல்விமான்கள், உயர் அதிகாரிகள், உலமாக்கள், இளைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 unnamed (5)_Fotor