வேட்பாளர் அமீர் அலியின் தேர்தல் மேடையில் சட்டத்தரணிக்கு நூறுவீத ஜனநாயகம்…

கவர் போட்டோ_Fotorஅஹம்ட் இர்ஸாட்

 

வாழைச்சேனை ஹைராத் பள்ளிவயலுக்கருகாமையில் 28.07.2015 செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா வேட்பாளர் அமீர் அலியினை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார மேடையில் கல்குடா பிரதேசத்தின் சிரேஸ்ட சட்டத்தரணியான எம்.பிஎம் ஹுசைன் அமீர் அலியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக குறித்த தேர்தல் பிரச்சார மேடையில் அமீர் அலி இருக்கத்தக்கவாறு கடந்த காலங்களில் அமீர் அலியினால் விடப்பட்டிருந்த பிழைகளை பகிரங்கமக சுட்டிக்காட்டி உரையற்றியமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசானது இலங்கை வாழ் மக்களுக்கு நூறுவீத கருத்துச் சுதந்திரத்தினை அவர்களின் மேடைக்கு வந்து தெரிவிக்கும் அளவுக்கு வழங்கியிருக்கின்றது என்பதனை கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கருத்துக்கனிப்பிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது..

சிரேஸ்ட சட்டத்தரணியான எம்.பி.எம்.ஹுசைனின் பேச்சினை தொடர்ந்து உரையாற்ற வந்த முன்னாள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் கங்கிரசின் கல்குடா வேட்பாளருமன சட்டத்தணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு சிரேஸ்ட்ட சட்டத்தணி ஹுசைனினால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறி பகிரங்கமாக அவர்களினால் விடப்பட்ட பிழைகளை சுட்டிக்காட்ட முடியுமா? அல்லது அவர்களினால் இவாறானதொரு ஜனநாய கொள்கையினை கடைபிடிக்க முடியுமா என்ற கேள்வியினை தொடுத்தார். 

மேலும் அங்கு உரையாற்றிய அமீர் அலி கடந்த காலங்களில் எங்களினால் விடப்பட்ட பிழைகளை இவ்வாறு சிரேஸ்ட்ட சட்டத்தரணியினால் சுட்டிக்காட்டப்பட்டது போன்று உரிய நேரத்தில் எங்களிடம் சுட்டிக்காட்டி இருந்திருந்தால் இன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது கல்குடா சமூகத்தினை இவ்வாறு ஏமாற்றிக்கொண்டிருக்காது. அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது திட்டமிட்டு கல்குடா சமூகத்திற்கு செய்து கொண்டிருந்த பிழைகளை நீங்கள் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் விட்ட சில பிழைகளை பெரிதாக தூக்கிக்கொண்டு எங்களை பழிவாங்கும் நோக்கில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை கல்குடாவில் வளர்க்க திட்டமிட்டதின் பலனாகவே எங்களது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இழந்து நாங்கள் இன்று அரசியல் அனாதைகளாக்கப்பட்டுளோம்.

அத்தோடு எனது இருபதுக்கு இருபது எனும் அபிவிருத்தி திட்டத்தில் முதன்மை படுத்தப்பட்ட விடயமாக வாழைச்சேனை பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை ஒன்றினை பெற்றுகொடுப்பதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவிடயமாக இருப்பதோடு, கல்குடாவிற்கான குடிநீர் திட்டம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கடந்த காலங்களைப் போன்று வெளியூர் அரசியல்வாதிகளின் அரிசி மூடைகளுக்கு சோரம்போகாமல் கல்குடாவின் பிரதிநிதிதுவத்தின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு தனது வெற்றியினை கல்குடா மக்கள் உறுதிப்படுத்தப்பட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.