கலாநிதி இஸ்மாயிலின் தயக்கமும்,தாமதமும் அமைச்சர் ஹக்கீமின் வாதத்தினை மேலும் வலுக்கச் செய்கிறது !

 

10384674_1539570722957468_7806713547093066617_n_Fotor_Collage_Fotor

 

கடந்த திங்கள் கிழமை (27-07-2015) பொத்துவில்,அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய ஊர்களில் மு.கா சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கும் மூன்று வேட்பாளர்களினையும் ஆதரித்து மா பெரும் பிரச்சாரக் கூட்டம் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் பங்கேற்போடுஇடம் பெற்றது.இதில் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ஆகிய இடங்களில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் சம்மாந்துறையினை மையப்படுத்தி அ.இ.ம.காவில்களமிறங்கியுள்ள கலாநிதி இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்வதில் சட்டச் சிக்கல் உள்ளதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.

தேர்தல் கேட்க விரும்பும் ஒருவர் அரச பதவியில் இருப்பின் குறித்த நபர் அப் பதவியில் இருந்து சம்பளமற்ற விடுமுறையினைப் பெற வேண்டும். கலாநிதி இஸ்மாயிலினைப்பொறுத்த மட்டில் இம் மாதச் சம்பளத்தினைக் கூட பெற்றுள்ளதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.இருப்பினும் சம்பளமற்ற விடுமுறை போன்று கணக்கு எடுக்கக் கூடிய சம்பளத்துடனான சலுகை விடுமுறையினை கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பெறக் கூடிய சந்தர்ப்பம் உள்ளாகவும் அதனைப் பெற்றே அவர் இத் தேர்தலில் களமிறங்கியுள்ளதால் எது வித சட்டச் சிக்கலும் இல்லை என நம்பகத் தன்மை குறைந்த கலாநிதி இஸ்மாயில் பக்க நியாயம் ஒன்றும் உலா வருகிறது. 

அமைச்சர் ஹக்கீம் ஒரு சட்ட முதுமாணி ஆவார்.மேலும்,சட்டத்துடன் ஒட்டி உறவாடும் நீதி அமைச்சராகவும்,ஜனாதிபதி சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.ஒரு தேசியக் கட்சியினுடைய தலைவர் தனக்கு உறுதியற்ற ஒரு விடயத்தினை பகிரங்கமாக அவ்வளவு எளிதில் கூறவும் மாட்டார்..அதுவும் அமைச்சர் ஹக்கீமினைப் பொறுத்த மட்டில் பிடி வழங்காமல் கதைப்பதில் வல்லவராவார்.எனவே,அமைச்சர் ஹக்கீமின் கூற்று சாதாரணமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

இவ் அமைச்சர் ஹக்கீமின் கூற்றிற்கு பதில் அளித்துள்ள கலாநிதி இஸ்மாயில் அவர்கள் தான் பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ஹக்கீம் வீடு செல்வாரா? என்ற வினாவினை எழுப்பி அவ் விடயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.அமைச்சர் ஹக்கீம் இவ் விடயத்தில் எதிர் வாதம் புரிந்து கொண்டிருக்குமளவு அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவுஅவ்வளவு உசார் நிலையிலும் இல்லை.இதற்கு பதில் அளிக்க அவரிற்கு நேரமும் இருக்காது என்பதே உண்மை.எனவே,அமைச்சர் ஹக்கீமின் பதிலின்மையினைக்காரணம் காட்டி இவ் விடயத்தினை மறைக்கும் தந்துரோபாயத்தினை கலாநிதி இஸ்மாயில் குழுவினர் மேற் கொள்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை கூட்டத்தில் பேசுகையில் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை வெட்டிக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றதால் அமைச்சர் ஹக்கீம் தனது காதினை வெட்டிக் கொண்டார் என்ற குறையோடு அமைச்சர் ஹக்கீம் அங்கும் இங்கும் சுற்றித் திரிபவரும் அல்ல.எனவே,தனது காதினை வெட்டிக் கொள்வேன் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருப்பதானது கலாநிதி இஸ்மாயில் வெற்றி பெற்றால் தான் வீடு செல்வேன் என்பதற்கு நிகரான பொருளோடும் நோக்கலாம்.அமைச்சர் வீடு செல்வாரா? என்ற கலாநிதி இஸ்மாயிலின் இன்றைய வினாவிற்கு அமைச்சர் ஹக்கீம் அன்றே பதில் வழங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறியவுடன் இது பற்றி தெளிவு படுத்துமுகமாக தனது பக்க நியாயங்களினை மக்களிடம் முன் வைப்பதில் ஏன் கலாநிதி இஸ்மாயில் குழுவினர் தயக்கம் காட்டுகின்றனர்? இது பிழையாக இருப்பின் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி கேட்காது நேரடியாக மக்களிற்கு உண்மையினைப் புலப்படுத்தி அமைச்சர் ஹக்கீமின் பிழையான வாதத்தினை வெளிப்படுத்தி இருக்கலாமே! சில வேளை உரிய ஆதாரங்களினை கலாநிதி இஸ்மாயில் குழுவினர் மக்களிடம் முன் வைத்தால் அது மு.காவிற்கு பாரிய எதிர் விளைவினைக்கூட ஏற்படுத்தலாம்.நிலைமை இவ்வாறு இருக்க ஏன் கலாநிதி இஸ்மாயில் குழுவினர் தயக்கம் காட்டுகின்றனர்? இவர்களின் தயக்கமும்,தாமதமும் அமைச்சர் ஹக்கீமின் வாதத்தினை மேலும் வலுக்கச் செய்கிறது. 

வேட்பு மனுத் தாக்கல் ஏற்கும் நேரத்தில் கூட இது பற்றிய சல சலப்பு ஏற்பட்டுள்ளது.இவ் விடயம் பெரிதானால் இவ் விடயத்திற்கு உரிய தீர்வு கிட்டும் வரை தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற காரணத்தினால் இவ் விடயத்தினை யாரும் அதிகம் தூக்கிப் பிடிக்கவில்லை.

இவ் விடயத்தில் சட்ட சிக்கல் உள்ளது, கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற நிலை தோன்றினால் சம்மாந்துறை மக்கள் இம்முறை கலாநிதி இஸ்மாயிலிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.இதன் பிற் பாடு அ.இ.ம.கா நகைப்பிற்கு உட்படுத்தப்படுவதோடு ஒரு ஆசனம் என்ற கதையினை சிறிதேனும் வாயில்  எடுக்க முடியாத நிலை தோன்றும்(சம்மந்துறையிலிருந்து பெரும் தொகை வாக்கினைக் காட்டியே பல இடங்களில் அ.இ.ம.கா ஒரு ஆசனம் பெற முடியும் என்ற கணக்கினைக் காட்டுகிறது).இதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை காணப்பட்டாலும் நிச்சயம் அதனை தேர்தல் முடியும் வரை மறைத்தே செல்வார்கள்.

ஒரு தசாப்த கலாமாக  தங்களது  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்து தவிக்கும் சம்மாந்துறை மக்கள் இம்முறை எப் பாடு பட்டாவது தங்களது பிரதிநித்துவத்தினை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.தங்களது பிரதிநிதித்துவம் கலாநிதி இஸ்மாயிலினூடாக பெற முடியாதுஎன அறிந்தும் அவரிற்கு வாக்களிக்கும் மனப் பாங்கில் சம்மாந்துறை மக்கள் இல்லை.எனவே, கலாநிதி இஸ்மாயில் அவர்கள் உடனடியாக இது பற்றி சம்மாந்துறை மக்களிற்கு தெளிவு படுத்த வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.