சிம்பாபேயின் ‘பெருமைக்குரிய சிங்கம்’ கொலை செய்யப்பட்டுள்ளது !

150727110319_zimbabwe_lion_cecil_512x288_paulafrench

‘சிசில் தி லயன்’ என்று அறியப்பட்ட அந்தச் சிங்கத்தை கொலை செய்வதற்கு, ஹ்வாங்கே தேசிய வனவிலங்குப் பூங்காவிலுள்ள வழிகாட்டிகளுக்கு, அந்த நபர் 50,000 டாலர்களை அளித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அந்தச் சிங்கத்தை வில் மற்று அம்பு கொண்டு தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளனர் என்றும் பின்னர் அதன் தலையை வெட்டி தோலையும் உரித்துள்ளனர் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பதிமூன்று வயதான அந்தச் சிங்கமே அந்த வனவிலங்கு பூங்காவில் அனைவரையும் ஈர்க்கும் விலங்காக இருந்தது.

அந்தச் சிங்கத்தின் நடமாட்டங்களை, செயற்கைகோள் மூலம் கண்காணிக்கும் வகையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் அதன் காதில் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.

ஜிம்பாப்வே சட்டவிரோதமான வகையில் சிங்கங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க சிரமங்களை எதிர்கொள்கிறது.