வன்னித் தலைமைக்கு சோரம் போவதா ?

vawa

எமது தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியானது கிழக்கை மையப் படுத்தி கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என்னால் ஆரம்பிக்கப் பட்டது அதுமட்டும் அல்ல கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட பல கல்விமான்களும் எமது கட்சியின் முக்கிய அங்கத்தவர்களாக உள்ளனர். முற்றத்து மல்லிகை மணக்காது என்பதை நாம் அறிவோம் ,கண்டித்  தலைவனால் நாம் பட்ட துயரமும்  போதும் , புலம்பலும் போதும் ,இத்தேர்தல் பிரச்சார மேடைகளில் கூட இம் முறை பலம் பொருந்திய அமைச்சுப் பதவிக்கு பேரம் பேசுவோம் என்று அமைச்சுப் பதவி பெறுவதிலேயே குறியாக உள்ள  கண்டித் தலைவன் இம்முறையும் எமக்கு வேண்டுமா? நீங்களே தீர்மானம் செய்யுங்கள் . தற்போது  அதே போன்ற  வேறு ஒரு புது அலை நமது பிரதேசத்தில் உலா வருகிறதை அறியக் கூடியதாக உள்ளது அதில் கண்மூடித் தனமாக மக்கள் அள்ளுண்டு போவதையும் காணக் கூடியாதாக உள்ளது. அதுதான் வன்னி அலை.  மீண்டும் நாம் வன்னித் தலைவனுக்கு சோரம் போவதா , ஏன் நாம் கண்டித் தலைவனிடம் கற்ற பாடம் போதாதா. தற்போது வந்துள்ள வன்னித் தலைமை .கட்சி மாறி அரசியல் வாதிகளை தமது கைக்குள் போட்டுக் கொண்டும்,தேசிய பட்டியல் ஆசை வார்த்தை காட்டிக் கொண்டும் நமது பிரதேசத்தில் அடிவைத்துள்ள வன்னித் தலைமைக்கு நாம் சோரம் போவதா? , நன்றாகச் சிந்தியுங்கள். வெளி  ஊர் அழகனை விட உள்ளூர் முடவன் மேல் என்பார்கள் . உங்களது பிரதேச வாதியால் வழி நடத்தப் படும் கட்சிக்கு ஏன் உங்களால் வாக்கு அளிக்க முடியாது ? 

கண்டித் தலைமையை விட , வன்னித் தலைமையை  விட  தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் கிழக்குத் தலைமை எவ்வளவோ மேல்  என்று வரும் காலத்தில் நீங்கள் அல்லது உங்கள் வருங்கால சந்ததியினர்  கூறத்தான் போகிறீர்கள் . மண் வாசனை மண் வாசனைதான் .என்பதையும் உணரத்தான் போகிறீகள் 
வெளி ஊர் அமைச்சர்கள் எத்தனையோ பேர் அமைச்சுப் பதவியில் அமர்ந்து இருந்தனர் . நமது பிரதேசத்துக்கு ஏதும் பயன் கிடைத்துள்ளதா? இல்லவே இல்லை சிந்தியுங்கள் 
இம்முறை நாம் ஒட்டகச் சின்னத்தில் களம் இறங்கி உள்ளோம் , நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளோம் ,அதையும் படியுங்கள் பிறகு சிந்தியுங்கள் 
நீங்கள் கிழக்கு மண் வாசனை உள்ளவர் களாயின் கிழக்கானை நேசியுங்கள் . வேட்பாளர்கள் கிழக்கைச் சேர்ந்த வராயினும் வன்னியின் தலைமைக்கு கட்டுப் பட்டவராகவே இருப்பார்கள் என்பதையும் சிந்தியுங்கள்
மீண்டும் ஒரு வெளி ஊர் தலைமை வேண்டவே வேண்டாம் , சிந்தியுங்கள் , ஒட்டகச் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் , நான் கூறுவது பகிடியாக கூடத்  தெரியலாம் , ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் நீங்கள் இச் சந்தர்ப்பத்தை தவற விடுவீர்கள் எனின் மீண்டும் ஒரு முறை மோசம் போவீர்கள்