எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கண்டி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் நிலைப்பாடு குறித்தும் ஆராயும் விசேட கூட்டம் கடந்த வியாழன் கண்டியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் மு.கா.கண்டி மாவட்ட அமைப்பாளரும் மத்திய மாகான சபை உறுப்பினருமான உவைஸ் ஹாஜியார் தலைமையில் நடை பெற்றது.
கண்டி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய செயற்பாட்டாளர்கள் மு.கா.கிளைகளின் பிரதிநிதிகள் உலமாக்கள் என பலரும் கலந்துக்கொண்டிருன்தனர்
எதிர் வரும் பொதுத்தேர்தலில் மு.கா.தேசியத் தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீம் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகிறார் என்ற விடயமும் இதுவரைக்கும் கண்டி மு.கா.செயட்பாட்டாலர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கான எந்த விதமான அறிவித்தலும் கிடைக்க வில்லை என்ற பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டது
இதன் போது கருத்து தெரிவித்த மு.கா.கண்டி மாவட்ட அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கம் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை அபிலாஷைகளை பாதுகாப்பதட்காகவேயாகும்
கடந்த ஆட்சியின் போது முஸ்லிம் மக்களின் உடமைகளுக்கு அச்சுறுத்தல் மார்க்க நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை என்று பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து அந்த கொடுங்கோல் ஆட்சியை நம்மால் மறந்து விட முடியாது
முஸ்லிம் சமூகம் மேலும் தலை நிமிர்ந்து சுய மரியாதையுடன் பாதுகாப்புடன் வாழும் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்
இவைகளை முஸ்லிம் காங்கிரஸ் எதிர் அணியில் இருந்துக்கொண்டு எதிர் கட்சி அரசியல் செய்வதன் மூலம் சாதிக்க முடியாது என்பதால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை தோற்றுவிக்க போட்டியிடுகின்றது.
கட்சிக்குள் சில முரண்பாடுகள் இருந்து வருவது கவலைக்குரிய விடயம்தான்
இது குறித்து கட்சி தலைமைத்துவம் கவனம் செலுத்தி அனைவரையும் அரவணைத்து எதிர்வரும் தேர்தலை வெற்றி பெற முன்வர வேண்டும்
நாம் எந்த தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும் அது எமது சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாகவே அமைய வேண்டும்
எனவே நாம் பொறுமையாகவும் நிதானமாகவும் சிந்தித்து சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்