முதலமைச்சர் ஊடகப்பிரிவு
பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமதினைச் சந்திக்க மக்கள் அணிதிரண்டு வருகின்றமை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வெற்றிக்கு உதாரணம் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் சம்மந்தமாக ஆதரவாளர்களைச் சந்திக்கும் நிகழ்வு இன்று எம்.எஸ்.கபூர் தலைமையில் ஏராவூர் மத்ரஸா முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ.மு.கா.பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் உரையாற்றுகையில்:
இன்று சிலர் கொள்கை! கொள்கை என்று உரத்துக்கூறிக்கொண்டிருக்கிறார்கள். கொள்கை என்றால் என்ன..? என்று அவர்களிடம் நாம் கேட்க வேண்டும்.
உதாரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கைகள் இருக்கும்
தன்னூருக்கு சிறந்த பாடசாலை அமைக்கவேண்டும், தன்னூரில் நல்ல முறையில் பாதைகள் அமையப்பெறல் வேண்டும், தன்னூர் வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் வேண்டும், தன்னூரில் சிறந்த தொழில் நிலையங்கள் அமைக்கப்படல் வேண்டும், தன்னூர் இளைஞர் யுவதிகள் வேலையற்று இருப்பதனைத் தடுத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் இப்படிக் கொள்கைகாள் இருப்பவந்தான் மனிதன். கொள்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லையென்றாகிவிடும்.
எனவே கொள்கை கொள்கை என்போர் தான் வாழனும் அதிலும் மக்களை மடையர்களாக்கித்தான் தான் வாழனும் என்னும் கொள்கயில் சிலர் அலைமோதுவதாக இன்று நினைக்கத் தோன்றுகிறது. நமது கொள்கைக்கு ஒரு வரைவிலக்கனம் வேண்டும் அந்தக் கொள்கையை இதற்காகத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற சரியான முறையும் தெரிந்திருக்க வேண்டும். மாறாக கொள்கை கொள்கை என்று தொண்டை கிளிய மேடையேறிப்பேசிவிட்டு, தான் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால் கொள்கை எல்லாம் குப்பையில்தான் போடவேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை புத்துணர்சியுள்ள ஒரு கட்சியாகவும் அதன் போராளிகளை சரியான முறையில் வளிநடத்தவும், கவனிக்கவும் புதிய யுகம் கையாளப்படவேண்டும், பழையன மறந்து புது யுகத்தில் அனைவரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்சியில் உள்ள அனைவருக்கும் உள்ளன.
எனவே இன்று யாரை எடுத்தாலும் ஒவ்வொரு முறைப்பாடு கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் சரியான தீர்வு பெறப்படவேண்டும், அனைத்திற்கும் பதிலளித்து கட்சி புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் தலைவரின் தியாகத்தில் அனைவரும் கைகொடுத்து செயற்பட வேண்டும். தலைமைத்துவம் என்பது நாம் நினைப்பது போன்று விளையாட்டுக்கழகங்களின் தலைமைத்துவம் போன்றதல்ல. மாறாக ஒரு நாட்டின் தேசியத்தலைமை மிகவும் கஷ்டமானது.
ஆகவே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருவரும் கேட்கும் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் என்று என்ணுவது எந்த வகையில் நியாயம் இல்லையோ அதுபோல கட்சியின் தலைவரை நெருக்குவதனையும் நாம் சற்று விலக்கி மற்றவர்களுக்கும் மற்ற ஊர்களுக்கும் இடம்கொடுத்து நமக்கானவற்றை நாம் முயற்சித்துப் பெற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.