அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியலை வழங்கத் தீர்மானம்!

imageஅபு அலா 

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடாகத்தான் கிடைக்கும். வேறு எந்தக் கட்சியினாலும் இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒருபோதும் கிடைக்கேவே கிடையாது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் அதி உயர்பீட உருப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை தேர்தல் காரியாலயத்தில் இன்று இரவு (22) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த 30 ஆண்டு காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரும்பாடுபட்டு பல சவால்களை எதிர்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து பல தியாகங்களை செய்து வந்துள்ளீர்கள். நீங்கள் அன்று பாடுபட்டவைகளுக்கெள்ளாம் இன்று காலம் கனிந்து அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற தருவாயில் நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நாம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் எதிர்கொள்ளவுள்ள தேர்தல் ஒரு வித்தியாசமான முறையில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதற்காக நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து செயற்பட்டால்தான் எமது கட்சியையையும், எமது கட்சி சார்பில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் வெற்றிகொள்ள முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை இம்முறை அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியலை எமது அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு வழங்க தீர்மானித்துள்ளது. எனவே நீங்கள் இதை ஏற்று எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதன் மூலம்தான் எமது சமூகத்தையும் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரங்களையும், எங்களுக்கெதிராக மேற்கொள்ளும் சதித் திட்டங்களையும் முறியடிக்க முடியும் என்றார்.