ஜோர்ஜ் புஷ் கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்தது !

 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கீழே விழுந்து கழுத்தெலும்பு ஒன்று முறியவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் வழுக்கி விழுந்ததில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கழுத்து எலும்பு முறிந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
91 வயதுடைய ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் மைனே பகுதியில் உள்ள கென்னிபங்க்போர்ட் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தவறிக் கீழே விழுந்ததுள்ளார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது.

 தற்போது அவர் சிகிச்சைக்காக போர்ட்லாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் மட் போல் தெரிவித்துள்ளார். 

நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு உண்டு. 

இதேபோன்று அண்மையில் தனது 70ஆவது திருமண தினத்தைக் கொண்டாடி, அதிக ஆண்டுகள் தம்பதிகளாக இணைந்து வாழும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். அமெரிக்காவின் 41ஆவது அதிபராக இருந்தவர் ஜோர்ஜ் புஷ். ரீகன் ஜனாதியாக இருந்தபோது துணை ஜனாதிபதியாக இருந்தார். இதன் பின்னரே ஜனாதிபதியானார்.