தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறமுடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் சரிசமமான பிரதிநிதிகளைப் பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
அவ்வாறு ஏற்பட்டால் நாம் பாராளுமன்றத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம் என்றும் கூறினார்.
திருகோணமலையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.