முன்னாள் பாராமன்ற உறுப்பினர்களாக மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சரன குணவர்தன, சஜின்வாஸ் ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பவில்லை என கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க சென்ற போதே சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.