அஹமட் இர்ஸாட்
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடுக்கின்ற வேட்பாளர்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று 12.07.2015 எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும, லசந்த அழகியவன்ன ஆகியோர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ போட்டியிடுவதற்கான தனது கையொப்பத்தினை இட்டுள்ளதாகவும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும…. எனது நண்பனான சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சென்றுள்ளமையானது அவர் விளாம்பழமாக மாற்றமடைந்து யானையின் வாய்குள் சென்றடைந்த விடயமாக தான் பார்ப்பதாக தெரிவித்தார். அதனோடு சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளமையினை இட்டு தாங்கள் எவ்வித கவலையும் அடைய வில்லை. அவரின் பாய்ச்சலினால் எமது கட்சிக்கு இருக்கும் வாக்குவங்கியில் எவ்விதமான சரிவும் இத்தேர்தலில் ஏற்படப்போவதில்லை. இவ்வாறான கட்சித்தாவல்கள் அவருடைய அரசியல் வரலாற்றில் ஒன்பது தடைவைகள் நடந்தேறியுள்ளது. அத்தோடு ராஜித கட்சி மாறும் வித்தையினை பற்களை பிடுங்கி வீசுவதை விடவும் இலகுவான காரியமாக நினைத்து அரசியல் செய்து வருகின்றார் எனக் கூறினார்.
மேலும் மற்றுமொரு எங்கள் கட்சியின் ஊருப்பினரான அர்ஜுனா ரனதுங்க ஐக்கிய தெசியக் கட்சியின் பக்கம் சென்றுள்ளமையானது கவலை அளிக்கின்ற விடயமாக இருந்தாலும், சந்திரிக்கா அம்மையார் மிகவும் மரியாதையுடன் அர்ஜுனாவுக்கு சுதந்திரக் கட்சியில் முக்கிய இடத்தினை கொடுத்தமைக்கும் அவர் மேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைத்திருந்த மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகவே தான் அர்ஜுனாவின் கட்சித்தாவலை பார்க்கின்றதாக கூறினார்.