தவம் , நசீர் இல்லாமல் மூவருடன் களமிறங்கும் SLMC !

image

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் இன்று வேட்புமனுப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் , பைசல் காசிம் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் ஆகியோர் களமிறங்குகின்றனர் .

நேற்று  நண்பகல் வரை மாகாண சபை உறுப்பினர்களான எ .எல் .தவம் , எ.எல்.எம் நசீர் ஆகியோர் போட்டி இடவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.