அபு அலா
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறைமாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகபோட்டியிடவுள்ள 04 வேட்பாளர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் நஸீராகும்.
மற்றயவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கல்முனையைச் சேர்ந்த எச்.எம்.எம் ஹரீஸ் நிந்தவூரைச் சேர்ந்த பைசால் காசீம் மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்களே அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாது வந்த குறையை போக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்று சிறந்ததோர் நபரை தெரிவு செய்து வழங்கியிருப்பதை காணக்கூடியதாகவுள்ளன.
மக்களின் நல்லபிப்பிராயங்களை வென்ற ஒருவரும் கட்சிக்கு விசுவாசமுள்ளவருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை அம்பாறை மாவட்ட மக்கள் அங்கிகரித்திருப்பதையும் அறியக்கூடியதாக உள்ளன.