ஐபிஎல் டி20 இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.