மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக்கூடாது என்றும் மீண்டும் சர்வாதிகார ஆட்சி ஒன்றை ஏற்படுத்தகூடாது என்றும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் : ரில்வின் சில்வா !

tilvin_silva_jvp

 

மைத்திரிபால சிறிசேனமீது மக்கள் வைத்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜே.வி.பி மகிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்து மைத்திரி தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அர்ப்பணிப்பு அனைத்தையும் மைத்திரிபால சிறிசேன சிதறித்துவிட்டார் என்றும் ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மூவின மக்களும் மைத்திரிபால சிறிசேனவை ஏன் வெற்றி பெற வைத்தனர் என்பதை அவர் மறந்துவிட்டார் என்றும் ரிவின் சில்வா தெரிவித்தார். 
கடந்த பத்து வருடங்களாக மோசமான இராணுவ ஆட்சி ஒன்று இலங்கையில் நடைபெற்றதாகவும் அதனையே மக்கள் முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் ராஜபக்ச குடும்பம் பெரும் ஊழில்களி்ல் ஈடுபட்டதாக குறிப்பிட்ட அவர் மைத்திரிபால மீது மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது என தாம் ஆரம்பத்தில் எச்சரித்திருந்தாகவும் தெரிவித்தார். 
இவ்வளவு காலமும் மோசமான தலைவர் என மகிந்தவை விமர்சித்த மைத்திரிபால இப்போது கட்சியை காப்பாற்ற மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்றும் குற்றம் சுமத்தினார். 
மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக்கூடாது என்றும் மீண்டும் சர்வாதிகார ஆட்சி ஒன்றை ஏற்படுத்தகூடாது என்றும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் மோசடிகளுடன் மைத்திரிபால சிறிசேனவின பொய் வாக்குறுதிகளையும் தாம் அம்பலப்படுத்தப் போவதாக ஜே.வி.வி எச்சரிக்கை விடுத்துள்ளது.