எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு !

z_p01-CHINA-u

 

 எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகமயில் தெரிவித்தார்.

தாம் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குடு, எத்தனோல் பயன்பாட்டாளர்களுக்கு கூட்டமைப்பினால் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு பல நன்மைகளையும் பாரிய பொருளாதார வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. எனினும், அனைத்தையும் நிறைவு செய்துகொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது போயுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மாதுலுவாவே சோபித தேரர், அதுரேலிய ரத்தன தேரர், பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடனும் லங்கா சமசமாஜக் கட்சி, கமியூனிஸ்ட் கட்சி மற்றும் 49 சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.

அத்துடன், பொது சின்னம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்மையினால் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் காலப் பகுதி என்பதால் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியைப் பதிவு செய்ய முடியாது போயுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.