உலகின் மிகவும் வயதான ஆணான ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோயி தனது 112 ஆவது வயதில் மரணமாகியுள்ளார்.
முன்னாள் உயர் பாடசாலை அதிபரான அவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக டோக்கியோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றில் மரணமாகியுள்ளார்.
5 பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த ஓகஸ்ட் மாதம் உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் உலகின் வயதான நபரும் பெண்ணுமான மிஸவோ ஒகவா தனது 117 ஆவது வயதில் மரணமானமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகின் வயதான நபர் மற்றும் பெண் என்ற பெயரை அமெரிக்காவைச் சேர்ந்த 116 வயதான சுஸனஹ் மஷட் ஜோன்ஸ் பெறுகிறார்.அவர்கடந்த திங்கட்கிழமை தனது 116 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.