அஞ்சலோ மத்யூஸ் அபார சதம்; பாகிஸ்தானுக்கு வெற்றிபெற இன்னும் 144 ஓட்டங்கள் தேவை !

216889.3

 தமது இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதிய நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 377 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்ட்டுள்ளது.

 இலங்கை அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தனது 5 ஆவது சதத்தை இன்றைய தினம் பூர்த்தி செய்து 122 ஓட்டங்களைக் குவித்து இறுதியாக ஆட்டமிழந்தார்.

 மேலும் சந்திமால் அரைச்சதம் கடந்து 67 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. சந்திமால் மற்றும் மத்யூஸ் இணைந்து 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்தமை விசேட அம்சமாகும்.

 பந்துவீச்சில் பாகிஸ்தான அணி சார்பில் இம்ரான் கான் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக தமது முதல் இனிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்களையும் குவித்திருந்தன.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்ட முடிவின் போது 230 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது .

 பாகிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 144 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது .
பாகிஸ்தான் அணி சார்பாக யூனுஸ் கான் 101 ஓட்டங்களையும் , சான் மசூத் 114 ஓட்டங்களையும் பெற்றுக் களத்தில் நிற்கின்றனர் .

216901.3

Pakistan cricketer Shan Masood (R) plays a shot as Sri Lankan cricketer Lahiru Thirimanne looks on during the fourth day of the third and final Test cricket match between Sri Lanka and Pakistan at the Pallekele International Cricket Stadium in Pallekele on July 6, 2015. AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)