பிரதமர் வேட்­பா­ள­ராக சமல் ராஜ­ப­க் ஷவை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­யி­டப்­பட்ட கருத்து முற்­றிலும் தவ­றாகும் – சுசில்

Susil-Premajayantha_1

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிரதமர் வேட்­பா­ள­ராக சமல் ராஜ­ப­க் ஷவை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­யி­டப்­பட்ட கருத்து முற்­றிலும் தவ­றாகும். கட்­சியின் இர­க­சி­யங்கள் அனை­வ­ருக்கும் தெரி­யாது. நாட்டு மக்கள் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும். இது குறித்து திங்க­ளன்று உண்­மைகள் வெளிவரும் என ஐக்­ கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் பொதுச் செ­ய­லாளர் சுசில் பிரே­ம்­ஜ­யந்த தெரி வித்தார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மெத­மு­ல­னவில் ஆற்­றிய உரைஎமது மனங்­களை கவ­லை­யுற வைத்­துள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் நோக்­குடன் அனைத்து கட்­சி­களின் செய­லா­ள­ரை­க­ளையும் நேற்று தேர்தல் செய­ல­கத்தில் வைத்து ஆணை­யாளர் சந்­தித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக சமல் ராஜ­பக்ஷ போட்­டி­யிட போவ­தாக நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது தெரி­விக்­கப்­பட்ட கருத்து உண்­மைக்கு புறம்­பா­ன­வை­யாகும்.

தேர்­தலின் போது பிர­தமர் வேட்­பா­ளர்கள் எவரும் நிய­மிக்­கப்­பட்­ட­வில்லை என்றே ஜனா­தி­ப­தியின் ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­தி­ருந்­தது. இந்த நிலையில் எவ்­வாறு பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க்ஷவை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சிக்­கப்­ப­டு­வ­தாக கூற முடியும்.

ஆகவேஇ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உள்­ளக இர­க­சி­யங்கள் எவ­ருக்கும் தெரி­வ­தற்கு வாய்ப்­புகள் இல்லை. தற்­போது கட்­சியின் வேட்­பு­மனு தெரி­வுக்­குழு கூடி­யுள்­ளது. கட்­சியில் நேர்­மு­கப்­ப­ரீட்சை தற்­போது மும்­மு­ர­மாக நடைப்­பெற்று வரு­கி­றது. எனவே இதன் பின்­ன­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி எந்தக் கட்­சியில் போட்­டி­யி­டுவார் என்­பது வெகு­வி­ரைவில் தெரி­ய­வரும்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பு­மனு குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மிகவும் சாத­க­மாக நிறைவுப் பெற்­றுள்­ளன. கட்­சியின் ஒற்­றுமை குழுவின் அறிக்­கையும் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கைகளில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.
எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எந்த கட்­சியில் போட்­டி­யி­டுவார் என்­ப­த­னையும் இஎன்­னு­டைய நிலைப்­பாடு என்ன என்­ப­த­னையும் நீங்கள் அடுத்த திங்­கட்­கி­ழ­மை­யன்றோ அல்­லது செவ்­வாய்­கி­ழ­மை­யன்றோ அறிந்துக் கொள்­வீர்கள்.

மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று மெத­மு­ல­னவில் உள்ள அவ­ரது வாசஸ்­தல வளா­கத்தில் ஆற்­றிய உரை எமக்கு மிகவும் ஆறுதலையும் வருத்ததையும் தந்துள்ளது. எனவே அந்த வார்த்தைகளின் பிரதிபலனை நாட்டு மக்கள் விரைவில் கண்டுக்கொள்வார்கள். அத்தோடு பாராளுமன்ற தேர்தல் நீதியானதும் நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டும். எனவே நீதியான தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒத்தாசையாக இருக்கும் என்றார்.