முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் என அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சியிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் இது தொடர்பில் மஹிந்தவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (02) இரவு இடம்பெறவுள்ள முக்கிய கூட்டமொன்றின் போது இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.