முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மகிந்தவுடன் ?

11694021_832871026803734_4781554192419088300_n

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கேற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் என் சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்திருந்தார்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்கும் நிகழ்வில் அவர் பங்கேற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்ட பூர்வத்தன்மையை கடுமையாக சரத் என் சில்வா விமர்சனம் செய்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஹெல்பிங் ஹேன்ட் ஹம்பாந்தோட்டை நிதி மோசடியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சிறைத்தண்டனை விதிக்காமை தாம் இழைத்த மிகப் பெரிய தவறு எனவும் அதற்காக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை கடுமையாக சாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.