ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவது குறித்த விசேட பேச்சுவார்த்தை !

mahinda-maithri-970x623

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் மிக முக்கியமான கூட்டமொன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவை போட்டியிடச் செய்ய வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என மற்றுமொரு தரப்பினர் வாதம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவது குறித்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.