நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதா அல்லது மாற்றுத் தெரிவை மேற்கொள்வதா என்பதையிட்டு, தாம் இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கவுள்ளதாக பஸீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய 24 மணித்தியால் இருக்கும் வேளையில் தன்னுடைய முடிவை அறிவிக்கவுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட விவகாரங்கள் தொடர்பில் ரவூப் ஹக்கீமுடன் பேசவுள்ளதாகவும், தான் வகுக்கவுள்ள வியூகங்களை கட்சித் தலைமையும், உயர்பீடமும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடப்போவதாகவும் இல்லையேல் மாற்றுவழியை நாடப்போவதாகவும் பஸீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் மாற்றுவழிதான் என்ன என்று கேட்கப்பட்டபோது, எனக்காக பல கதவுகள் திறந்தேயுள்ளன எனவும், முஸ்லிம் காங்கிரஸுடன் தனக்கு பிரச்சினை இல்லையெனவும், கட்சியின் தலைமையிலுள்ள சிலரின் பிற்போக்குத் தனத்தினாலேதான் தனக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடனான அணுகுமுறையுடன் முரண்பட்டால் மாற்றுவழிகளையிட்டு, தாம் தீர்மானிப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.