கும்புருபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் தனியாக போட்டியிட்டு நாடாளுமன்றத்தினுள் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு தனியாக ஆட்சி செய்ய முடியும்.
எனினும் இந்த நாட்டிற்கு ஒற்றுமையான அரசியல் அவசியம் என்பதனால் எங்கள் வெற்றிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட அனைத்து குழுக்களையும் இணைத்துக்கொண்டு மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்போம்.
அனைவரையும் இணைத்துக்கொள்ள ஆயத்தம் என்ற போதிலும், மோசடியில் ஈடுபட்ட அபயராம தரப்பினரை ஒரு போதும் இணைத்துக்கொள்வதில்லை.
மஹிந்த ராஜபக்சவை மக்கள் துரத்தியது பின்னால் கதவின் ஊடாக மீண்டும் அரசாங்கத்திற்கு நுழைவதற்கல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.