கனடா- மாறிக்கொண்டே இருக்கும் ரொறொன்ரோவின் நில எழிலமைப்பு CN Towerஐ புதியதாக வைத்திருக்க உதவுவதால் அதன் காட்சி பார்வையாளர்களிற்கு எப்போதும் புதியதாக காட்சியளித்து கொண்டிருக்கின்றது. பார்வையில் அது எப்போதும் சிறிது வித்தியாசமானதாக காட்சியளித்து கொண்டிருப்பதாக சந்தைப்படுத்தல் இயக்குநர் லிசா ரொம்கின்ஸ் தெரிவித்தார்.
1815-அடி கட்டமைப்பின் அழகான காட்சிகளை பல மாடிகளில் இருந்து அனுபவிக்க கூடியதாக அமைந்துள்ளது. 1976 யூன் மாதம் 26ந்திகதி CN Tower முதல் தடவையாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. 1,537 பணியாட்கள் நாளொன்றிற்கு 24 மணித்தியாலங்கள் கிழமையில் ஐந்து நாட்களகாக 40 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி இந்த கோபுரத்தை கட்டி முடித்தனர்.
அப்போது உலகிலேயே அதி உயரமான கோபுரமாக விளங்கி கனடாவின் தொழிற்துறையை வலிமையானதாக வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. வருடந்தோறும் 1.5மில்லியனிற்கும் மேலான பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. பார்வையாளர்களில் அரை பாதி அளவினர் கனடாவிற்கு வெளியில் இருந்து வருபவர்களாகவும் அநேகமாக 75சதவிகிதமானவர்கள் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு வெளியில் இருந்து வருகின்றனர் எனவும் ரொம்கின்ஸ் தெரிவித்தார்.
மிக சமீபத்திய உள்ளீடான விளிம்பில் நடத்தல் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இது CN Tower ன் வெளிப்புறத்தில் மக்கள் 1,168 அடிகள் நடக்க அனுமதிக்கின்றது. இது வரை 70,000ற்கும் மேற்பட்டவர்கள் நடந்துள்ளனர என தெரிவிக்கப்பட்டுள்ளது.