முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அவருடன் இருக்கும் மிகநெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலா அல்லது வேறு கட்சியிலா போட்டியிடுவார் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
அவ்வாறு அவர் போட்டியிடுவாராயின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
இது, இவ்வாறிருக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டாளர்களுடன் நாரஹேன்பிட்டியவில் உள்ள அபயராம விஹாரையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பங்கேற்றுள்ளார்.