பஞ்சாபை வென்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி!

 

210763

 ஐபிஎல் டி20  இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முன்னதாக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வீரேந்தர் சேவாக் 47 ரன்கள் எடுத்தார்.

 166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது.