இன்று ஹக்கீம் தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் உளறிக்கொண்டிருக்கின்றார் !

images

அரிஸ் 

 ரவூப் ஹக்கீம் ஒன்றும் நமக்கு நபி அல்ல, அவர் சாதரண மனிதர் தான் ஆனால் இன்று முகப் புத்தகத்தில் சில  நண்பர்கள் சொல்லுகின்றார்கள் ரவூப் ஹக்கீமுக்காக போராளிகள் தங்கள் உயிரையும் விடுவார்கள் என்று . 

நான் கேட்கின்றேன் ஹக்கீம் என்ன செய்தார் ? இவர்கள் இவ்வாறு சிந்திபதற்கு இவர் சமூகத்துக்கு செய்த சாதனை தான் என்ன ? ஹக்கீம் அவர்களுக்காக முகப்புத்தக நீதி மன்றில் வாதட வருகின்ற சகோதரர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள் .

ரவுப் ஹக்கீம் அவர்கள் சட்ட முதுமாணி , ஒரு கட்சியின் தேசிய தலைவர் என்று தன்னை மார் தட்டும் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்ரியை ஆதரிக்கச் செல்லும் முன் ஏன் மைத்ரியின் தேர்தல் விஞ்சாபனத்தில் தெளிவாக குறிப்பிடபட்டிருந்த தொகுதிவாரி தேர்தல் முறையை அவரின் விழிகள் விசாலமாக விசாரணை செய்யமால் போனது துரதிஸ்ட்டம் தான் .  

 ஹக்கீம் அவர்கள் எப்போது அமைச்சரவையில் காலடி வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு இந் நாட்டு  ஜனாதிபதிகளுடன் முரண்பட்ட வரலாறுகளே அதிகம் சந்திர்க்கா அம்மையாருடன் முரண்பாட்டார் அதன் காரணாமாக அவரை சந்திரிக்கா அமைச்சரவையில் இருந்து நீக்கினார் , அது போன்று மகிந்த அரசில் இரண்டு தடவைகள் முரண்பட்டு வெளியேறி மீண்டும் அமைச்சரவையில் வந்து அமர்ந்தார். 

எங்கே சென்றாலும் எந்த தலைவர்களுடனும் ஒத்துழைக்கா  தன்மையை கொண்டுள்ள நயவஞ்சக அரசியலை செய்யும் தலைவராக ஹக்கீமை பெரும்பான்மை இன மக்கள் பார்கின்றார்கள் . இதன் காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தலை குனிகின்றார்கள்.

 இன்று தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் ஹக்கீம் இன்று உளறிக்கொண்டிருக்கின்றார் . ஏனெனில் அவர் கண்டியில் போட்டி இட்டால் தோல்வியை தழுவும் கள நிலவரம் தான் அங்கு காணப்படுகின்றது. அவர் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டி இட்டால் வெற்றி ஈட்டுவார் . ஆனால் அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றும் அரசியல் சித்தாந்தம் தெரியாதவர்கள் அல்ல அதனால் அங்கையும் அவரால் போட்டி போடுவது சிக்கல் நிலை தான் .
 
தன்னுடைய சுய நல அரசியல் இருப்புக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் மீண்டும் பெருபான்மை சமூகத்திடம் மண்டியிட வைக்க வேண்டாம்.