ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு !

DSC05469_Fotor
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ,இப் பள்ளி நிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
 
மேற்படி புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இப் பள்ளிவாயல் திறப்பு விழா நேற்று 25-06-2015 வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் தாஹிர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இப் பள்ளிவாயலை திறந்துவைத்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரின் சேவையை பாராட்டி றைஹானுல் கவ்ம் எனும் சமூகத்தின் நறுமனம் வீசும் செடி எனும் பட்டம் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி (மஜீதி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சுபைர்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி (மஜீதி) ,முன்னாள் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் செய்னுத்தீன் உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள் ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும்  கலந்து  கொண்டனர்.
4-DSC05415_Fotor 3-DSC05437_Fotor 1-DSC05451_Fotor