உங்கள் குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 6 முதல் 7 வயதுள்ள குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் சுவாரசியமான முடிவு கிடைத்துள்ளது.
அதிக வார்த்தைகள் மற்றும் படங்களை நினைவு வைத்திருக்கும் குழந்தைகள் பொய் சொல்வதில் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.
அதேசமயம் நினைவு திறன் குறைவாக உள்ள குழந்தைகள் சரியாக பொய் சொல்ல தெரியாமல் மாட்டிக்கொள்வதும் தெரியவந்துள்ளது.
இனிமேல் என் குழந்தை அதிகமாக பொய் சொல்கிறது என்று புலம்புவதை விட்டுவிட்டு என் குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்று மகிழ்ச்சி அடையுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்