தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு சந்திரிக்கா ஆலோசனை!

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

மாவட்ட மட்டத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். 

மக்களை கவர்ந்து கொள்வதற்காக மைத்திரியும் மஹிந்தவும் இணைந்திருக்கும் படங்களை தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். 

அண்மையில் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மேடைகளில் ஏறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மஹிந்தவை விமர்சனம் செய்து வரும் சந்திரிக்கா அவரது படத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.