மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் கதை போலியானது!

mahinda
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என சில ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் முற்றிலும் பொய் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக, மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி எதிர்ப்பல்ல எனினும் பொது தேர்தலின் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இணக்கம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் முயற்சியில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கப்பதற்கு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.